உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


செய்கின்றனர். ஆயினும், பிராமணர் என்றும் பிராமணரே. இங்ஙனமே, ஏனை வகுப்பாரும் கல்வியல்லாத மற்றத் தொழில்களை யெல்லாஞ் செய்துகொண்டு, உலகுள்ளவரையும் உடனுண்டலும் மணவுறவுமின்றி, வெவ்வேறு இருப்புக் கூண்டுக் குலங்களாக இருந்துவரவேண்டுமென்று அவர் விரும்புகின்றனர். இதனால், நாட்டுமக்கள் முன்னேற்றமும் ஒற்றுமையு மின்றி, வந்தேறிகளான பிராமணர்க்கே என்றும் அடிமைத்தொண்டு செய்துவருமாறு, வரணாச்சிரம தருமம் என்னும் குலவொழுக்கத் திட்டம் வகுக்கப் பட்டதென்பது தெளிவாகின்றது.

அகம்படியன்

இற்றைப் பிறவிக் குலங்கள்

தொழில் - பண்டைநாளில் மறவர்குல மன்னர் மாளிகைகளில் அகம்படித் தொண்டு (இல்லப்பணி) செய்தவர். இன்று தென் மாவட்டங்களிற் பயிர்த்தொழிலும் வடார்க்காட்டு மாவட்டத் திற் கொத்த (கட்டட) வேலையும் செய்பவர். )

·

பிரிவு - ஐவழி நாட்டான், கோட்டைப்பட்டு முதலிய பன்னீரக மணப் பிரிவுகள் (Endogamous steps).

பட்டம் - அதிகாரி, சேர்வைகாரன், பிள்ளை, முதலியார். "கள்ளன் மறவன் கனத்தோர் அகம்படியன்" என்னும் பழமொழி, குலந்தோன்றிய வழியைக் காட்டும்.

அம்பல(க்)காரன்

தொழில் - பயிர்த்தொழிலும் ஊர்காவலும்.

பிரிவு - முத்திரியன் (முத்தரையன்), காவல்காரன், வன்னியன், வலையன் என்னும் நாலக மணப்பிரிவுகள்.

பட்டம் - சேர்வைகாரன், முத்தரையன் (முத்தரசன்), அம்பல காரன், மழவராயன் (மழவரையன்), வன்னியன், மூப்பன்.

அளவன்

தொழில் - உப்பளத்தில் உப்பு விளைத்தல்.

பட்டம் - பண்ணையன், மூப்பன்.

இடையன்

பெயர் - அண்டன், ஆயன்(ஆன்வல்லவன்), இடையன், குடவன்,கோவன் (கோன்,கோனான்), கோவலன்,தொறுவன், பொதுவன்.