உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


கைக்கோளன் பேரிச்செட்டி

குறவன்

-


பொன்னம்பலத்தான்

வீரமுட்டி

தொழில் வேட்டையாடல், கூடைமுறம் முடைதல், உப்பு விற்றல், மருத்துவஞ் செய்தல், திருடல்.

பெண்டிர் தொழில் - குறிசொல்லுதல், பச்சை குத்துதல்.

பிரிவு - ஊர்க்குறவன், மலங்குறவன், நாடோடி.

ஊர்க்குறவன் பிரிவு தப்பை (மூங்கில்வேலை), கொங்கன், உப்பு.

பல அகமணப் பிரிவுகள்.

மலங்குறவன் பிரிவு - குன்றக் குறவன், பூங்குறவன் (வேலன்), காக்கைக் குறவன் (கக்கலன்), பாண்டிக் குறவன் (நாஞ்சிற் குறவன்).

நாடோடிகள்-காளிக்கோட்டம்வரை பல்வேறு நாடு சென்று, அவ்வந் நாட்டு மொழி பேசி, வெவ்வேறு பெயர் கொண்டு, வேட்டை மருத்துவம் களவு ஆகிய தொழில் செய்பவர். குருவிக்காரன் அல்லது நரிக்குறவன் தமிழ் மராட்டி இந்துத்தானி ஆகிய மும்மொழி பேசுபவன்.

தலைவன் பட்டம்-பெரிய மனிதன் (மனுசன்), ஊராளி, பணிக்கன்.

குலப்பட்டம் சேர்வைகாரன், பிள்ளை, கவுண்டன் முதலியன.

குறும்பன்

தொழில் குறும்பாடு மேய்ப்பு, முரட்டுக் கம்பளி நெசவு, தேனெடுப்பு முதலியன.

பிரிவு - காட்டுக் குறும்பு X நாட்டுக் குறும்பு.

தேன்(ஜேன்) குறும்பு, பன்றிக் குறும்பு முதலியனஉட்பிரிவுகள். பட்டம் - மூப்பன்.

கைக்கோளன்

பெயர்-கைக்கோளன் (தமிழ்நாட்டின் நடுவும் தென்பாகமும்). செங்குந்தன் (தமிழ்நாட்டின் வடபாகம்).

கையிற் கோல் (நெசவுக் குழல்) கொண்டவன் கைக்கோளன்.