110
கோலன் - கோளன். குழல்-கோல். கையிற் செங்குந்தம் பிடித் திருந்த போர்ப் படையினர் வழிவந்தவர் செங்குந்தர்.
தொழில் - நெசவு.
பிரிவு
(சிலவிடங்களில்)
-
சோழியன், இறாட்டு,
சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம்,சேவக விருத்தி.
நாட்டுப்பிரிவு-72 நாடு.
வழக்கம் - ஒவ்வொருகுடும்பமும் ஒரு பெண்ணைக் கோவிலுக் குத் தேவ கணிகையாக விடுதலும், அவளொடு செல்வ அல்லது ஏழைப் பிராமணன் கூடுதலும். இவ் வழக்கம் நின்றுவிட்டது. தலைவன் பட்டம் பெரியதனக்காரன், பட்டக்காரன், புள்ளிக்காரன்,
குலப்பட்டம் - அடவியார், நயினார், முதலியார், மூப்பர்.
கொல்லன்
வகையும் தொழிலும் - ஐங்கொல்லர் (ஐங்கம்மாளர்).
மரக்கொல்லன் - தச்சன்.
கற்கொல்லன் - கற்றச்சன், கம்மியன். பொற்கொல்லன் - தட்டான், கம்மாளன்.
செப்புக் கொல்லன் - கன்னான்.
இருப்புக் கொல்லன் - கருமான் (கருமகன்), கொல்லன்.
முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக் கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன் தொழில் கொல் எனப்பட்டது. “மரங்கொஃறச்சரும்” என்று சிலப்பதிகாரம் (5 : 23) கூறுதல் காண்க. முதற்காலமாகிய கற்காலத்தில், மரத்தினாலுங் கல்லாலுமே வீடு கட்டப்பட்டது அதன் பின்னரே பொன்னும் செம்பும் உறையும் இரும்பும் கண்டுபிடிக்கப்பட்டன.வெண்கலக்கன்னாரும் செப்புக்கன்னாருள்
அடங்குவர்.
நாட்டுப்பிரிவு பாண்டியம், சோழியம், கொங்கம் என்னும் மூன்று அகமணப் பிரிவுகள்.
-
தலைவன் பட்டம் நாட்டாண்மைக்காரன், கருமத் தான் (காரியத்தன்).
குலப்பட்டம் - நயினார், பத்தன், ஆச்சாரி (ஆசாரி) ஆச்சாரி(ஆசாரி) என்பது பிராமணரொடு போட்டியிட்ட பிற்காலத்து ஆரியச் சொல்.