3
கிரேக்கரின் நகர நாட்டுக் காலத்தில் (கி.மு.458-404) அரசியல் மதியியல் (அகக்கரணவியல்) குமுகாயவியல் புத்தெழுச்சி யுண்டா யிற்று.கிரேக்க நாகரிகம், கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து நண்ணிலக் கடற்கரை ஐரோப்பிய நாடுகட்கும் கருங்கடற்கரை நாடுகட்குங் கொண்டுசெல்லப்பட்டது. கிரேக்கராலும் மக்கதோனி யராலும் (Macedonians) கி.மு.4ஆம் நூற்றாண்டில் ஒரு பேரரசு ஏற்படுத்தப் பட்டது. மக்கதோனிய அரசனான மாஅலெகசாந்தர் (Alexander the Great- கி.மு 356-323), சிந்துவெளிவரை அப் பேரரசை விரிவுபடுத்தி னான். கி.மு.5ஆம் நூற்றாண்டில் உரோமப் பேரரசு கிரேக்கப் பேரரசை வீழ்த்தியது. உரோமப் பேரரசின் தலைநகர், கி.மு.330-ல், உரோம நகரத்தினின்று (பின்னர்க் கான்சுத்தாந்தினோபில் எனப் பெயர்பெற்ற) பிசந்தியத்திற்கு (Byzantium) மாற்றப்பட்டபோது, பிசந்தியப் (Byzantine) பேரரசு தொடங்கிக் கி.பி. 1453 வரை நீடித்தது. பிசந்தியத்திலும் அதையடுத்த சுற்றுப்புறத்திலும் கிரேக்கரே யிருந்தனர். கிரேக்கப் பேரரசில் மட்டுமன்றி, உரோமப் பேரரசிலும் பிசந்தியப் பேரரசிலும் கிரேக்க நாகரிகமே இணைப்புக் கூறாக இருந்து, இற்றை ஐரோப்பிய நாகரிகத்திற்கு அடிகோலிற்று. ஆயின், அக் கிரேக்க நாகரிகத்திற்கு அடிமணை தமிழ நாகரிகம் என்பதை உலகம் இன்னும் அறிந்திலது.
மேலையாசியாவினின்று, கிரேக்க நாட்டிற்கு மக்கள் குடியேறு முன்பே, கொளுவுநிலை மொழிகளைப் பேசிக்கொண்டிருந்த துரேனிய இனத்தார் வட ஐரோப்பாவிற் குடியேறிவிட்டனர்.
துருக்கியர் (Turks), காசக்கர் (Cossacks) முதலிய வகுப்பார் சேர்ந்த தார்த்தாரிய (Tartarian) இனத்தாரும் இரசியாவிற் குடியேறியிருந்தனர். அதனாலேயே, “Scratch a Russian and you find a Tartar” என்னும் ஆங்கிலப் பழமொழி யெழுந்தது.
துரேனியர்க்கும் தார்த்தாரியர்க்கும் பின் மேலையாரியரின் முன்னோரான வடதிரவிடர் வடமேலை ஐரோப்பாவிற் குடியேறி னர். அங்கு அவர் மொழி தியூத்தானிய (Teutonic) ஆரியமாகத் திரிந்தது. அது பின்னர்த் தெற்கில் இலத்தீன முறையிலும் அதன்பின் கிரேக்க முறையிலும் மாறிற்று. அதற்கடுத்த திரிபே கீழையாரிய மூலமாகும். அதுவும் பின்னர் இந்தியம் ஈரானியம் என்னும் இருகிளையாகப் பிரிந்தது.
தியூத்தானியம் (செருமானியம்)
தியூத்தானியக்கிளை(1) மேலைச் செருமானியம், (2) வடசெரு மானியம், (3) கீழைச் செருமானியம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது. பழைய ஆங்கிலம், பழைய பிரிசியம் (Frisian), பழைய சாகசனியம், பழைய உயர்செருமானியம் என்பன மேலைச்