4
செருமானியத்தையும்; ஐசிலாந்தியம், தேனியம் (Danish), நார்வீசியம், சுவீடியம் என்பன வடசெருமானியத்தையும்; கோதியம் (Gothic), வாந்த லியம் (Vandalic) என்பன கீழைச் செருமானியத்தையும் சேர்ந்தவை யாகும்.இம் முப்பிரிவுகளுஞ்சேர்ந்ததியூத்தானியத்தின் மூலநிலையே (Proto Teutonic), தியூத்தானிய முறை என்று மேற்குறிக்கப்பட்டது.
பழைய ஆங்கிலம் அல்லது ஆங்கில சாகசனியம் (Anglo Saxon) என்று சொல்லப்படும் மொழியில், இன்று கிடைத்துள்ள முதற் பழைய எழுத்தேடு (document) 1200 ஆண்டகவையதே.
இலத்தீன்
இத்தாலியரின் முன்னோர், நடு ஐரோப்பாவிலிருந்து, கி.மு.8ஆம் நூற்றாண்டிற்குமுன், ஆல்பசு (Alps), அப்பெனைன் (Appennines) மலைத்தொடர்களின் வழியாக வந்து குடிபுகுந்தனர். கி.மு.753-ல், திபேர் (Tiber) ஆற்றங்கரைமேல் உரோம நகர் கட்டப்பட்டது. அந் நகரை யுட்கொண்ட இலாத்தியம் (Latium) என்னும் கோட்டத்தில் (Dt) பேசப்பட்ட மொழியே இலத்தீன். அது கி.மு.600-லேயே ஒரு திரி மொழியாயிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டில்தான் அது இலக்கியச் செம்மொழி யாயிற்று. அதன் காலம் பின்வருமாறு ஐம் பாகுபடும். 1. பழைய இலத்தீன் கி.மு. 75-ற்குமுன்
இலக்கிய இலத்தீன்
ப
2.
3.
பிந்திய இலத்தீன்
4.
5.
இடைக்கால இலத்தீன்
இக்கால இலத்தீன்
கி.மு. 75-கி.பி. 175
கி.பி. 175-600
கி.பி. 600-1500
கி.பி. 1500-லிருந்து
இலத்தீன முறையென்று மேற்குறித்தது இலத்தீனத்தின் மூல நிலையையே (Proto-Latin).
கிரேக்கம்
கிரேக்க நாடு பல நகரநாடுகளாகத் தோன்றியதனால், கிரேக்க மொழி பல கிளைமொழிகளாகப் பிரிந்திருந்தது. அக்கிளை மொழி கள் அத்திக்கம், அயோனியம், ஈயோலியம், தோரியம், ஆர்க்கேடியம், சைப்பிரியம் என்பன. அவற்றுள், அத்திக்கமே சிறந்த இலக்கியச் செம்மொழி யாயிற்று. அதன் திரிபான காய்னீ (Koine) என்னும் பொதுமொழியே, அலெகசாந்தர் பேரரசிலும் பிசந்தியப் பேரர சிலும் ஆட்சிமொழியா யிருந்தது. பழங்கிரேக்கத்தின் மிகப் பிந்திய வளர்ச்சியே இக்காலக் கிரேக்கம்.
இத்தாலியிலிருந்த 'கிரையாய்' என்னும் ஒரு சிறு மக்கட் கூட்டத்தின் பெயரினின்று, கிரீக்கு (Greek) என்னும் பெயர் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இத்தாலியும் கிரேக்க நாடும்