உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

படர்க்கைப் பெயர்களின் திரிபு, A Guide to Western Tamilologists என்னும் நூலில் விளக்கப் பெறும். பாலிலிருந்தே நெய் தோன்றினும், உருக்கின நெய் பாலினின்று எத்துணை வேறுபட்டுத் தோன்றுகின்றதோ, அத்துணை கிரேக்கச் சொல்லும் தமிழ்ச்சொல்லினின்று வேறு பட்டுத் தோன்றும் என அறிக. ஆரிய மொழிகளிலுள்ள எல்லாச் சுட்டு வினாச்சொற்களும் தமிழடியின என்பதையும் அறிதல் வேண்டும்.

நோஸ் வோஸ் என்னும் வடிவுகளின் ஈற்றை, மனம்-மனஸ் (வ.) என்னும் திரிபொடு ஒப்புநோக்குக.

அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்றுள் ஒன்றே யாயினுந் தனித்தமி ழுண்டோ?”

என்று வினவின சாமிநாத தேசிகர், இன்றிருப்பின், அன்றியும் வடநூற் களவிலை யவற்றுள் ஒன்றே னுந்தனி வடமொழி யுண்டோ?

என்று மாற்றியே பாடுவர்.

தமிழன் பள்ளியெழுச்சிப் பாடகர்

-

சுந்தரம் பிள்ளை

மனோன்மணீயத் தமிழ்த்தெய்வ வணக்கம்

66

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில் கற்பனையே.