உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்துக் கொருநீதி.

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

99

சென்ற நூற்றாண்டிறுதியில், சித்தூர் மார்க்கசகாய ஆச்சாரியர், பஞ்சாங்கங் குண்டையனொடு போராடி வென்று, பிராமணனின்றித் திருமணம் நடத்தி, கம்மாளர்க்கு விசுவப் பிராமணர் என்னும் பட்டமும் நாட்டிவைத்தார்.

ஆங்கில ஆட்சியின் விளைவாகவும் ஆங்கிலக் கல்வியின் பயனாகவும், திரவிடர் கண் விரிவாகத் திறக்கப்பட்டு, நயன்மைக் கட்சி தோன்றி,1920-லிருந்து 1937 இடைவரை இரட்டையாட்சியைத் (Diarchy) திறம்பட நடத்தி, தமிழரையும் திரவிடரையும் முன்னேற் றியது. அதனால், வகுப்புவாரிச் சுழல்பதவிகளும், குலத்தொகை விழுக்காட்டு அலுவற்பேறும், பிற்பட்டோர்க்குப் பலவகைச் சலுகை களும் ஏற்பட்டன. பேராய ஆட்சியிலும், தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலையாள தெலுங்கு கன்னட நாடுகளிலும் பிராமணரல்லார் முதலமைச்சராக வரவும், தமிழ்நாட்டிற் பிராமணரில்லா அமைச்சுக் குழு ஏற்படவும் முடிந்தது.

கல்வித் தொழில் பிராமணர்க்கே யுரியதென்னுங் கொள்கைக்கு மாறாக, ஆங்கிலர் எல்லா வகுப்பார்க்கும் அதைப் பொதுவாக்கித் தமிழரைப் பிராமணர்க்குச் சமமாக்கினதனால், தம் மேம்பாடும் பிழைப்பும் குன்றுவது கண்டு, ஏற்கெனவே ஆங்கிலராட்சியில் வெறுப்புற்றிருந்த பிராமணர், நூற்றிற்கு மூவராயுள்ள பிராமணர்க்கு அரசியல் அலுவற்பேறு நூற்றிற்கு மூன்றே யென்று நயன்மைக் கட்சி யாட்சி திட்டஞ் செய்தபின், கிளர்ந்தெழுந்து ஒன்றுகூடிச் சூழ்ந்து, ஆங்கில அரசை அடியோடொழித்தா லொழியத் தமக்கு உயர்வாழ் வில்லை யென்றறிந்து, மும்மொழிக் கூட்டு நாடாயிருந்த சென்னை மண்டலத்தில், தமிழருள்ளும் திரவிடருள்ளும் இளைஞரையும் தன்னலக்காரரையும் தமிழின் பெருமையை அறியாதவரையும் துணைக்கொண்டு, தேசியக் கட்சியைத் தோற்றுவித்து, வெள்ளைக் காரன் கொள்ளைக்காரன் என்றும், அவனை அகற்றிவிட்டால் விண்ணுலக வாழ்வு வந்துவிடு மென்றும், நயன்மைக் கட்சி அயலானுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றதென்றும்

பொதுமக்களிடம் சென்று புகட்டலாயினர்.

நூற்றிற்குத் தொண்ணூற்றுவர் கல்லாதவராயும் ஏழைகளாயும் இருந்ததனால், அடிமே லடியடித்தால் அம்மியும் நகர்வதுபோல், நாளடைவிற் பொதுமக்கள் தேசியக் கட்சித் தொண்டர்க்குச் செவி சாய்த்தனர்.