உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156


கிளையென்றும் பன்மொழிக் கலவையென்றும் பிராமணப் புலவர் காட்டியுள்ள நச்சுத் தன்மை நிறைந்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்தவோ, இற்றையரசு ஒரு சிறு தொகை யும் ஒதுக்கவில்லை.

தமிழ்நாட்டைத் தமிழ்நாடென்று அரசிய லேட்டிற் குறித்த தனாலும், அரசினர் சாலைக் கடத்தப் பேரியங்கிகளில் (Govt. Road Transport Buses) ஒவ்வொரு திருக்குறட் பலகையை ஆணி யறைந்து வைத்ததனாலும், தமிழ் வடமொழியினின்றும் இந்தியினின்றும் விடுதலை பெற்று வளர்ந்துவிடாது.

தமிழின் உண்மையான இயல்பை யறிந்து அதை அஞ்சாது போற்றிக் காப்பவன் தமிழ்நாட்டு ஆட்சித் தலைவனாகும் போதே, "தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்" என்னும் பாரதிதாசன் கனவு நிறைவேறியதாகும்.

ங்

தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்னும் உண்மையை, உலகறிய நாட்டுவேன். அதன்பின், நடுவணரசு வடமொழி அகரமுதலிக்குத் தரும் தொகைபோல் ஒன்றரை ம கேனும் தமிழகர முதலிக்குத் தராவிடின், தமிழ்நாடு கீழ்வங்க நாடு போற் பிரிந்தே யாகல் வேண்டும்.

சுரை யாழ அம்மி மிதப்பு

தமிழ்ப் புலவர் தமிழைப் பழம் பெருமைக்குக் கொண்டுவர வேண்டுமென்றும், ஆசிரியர் அறிவியல் மனப்பான்மை கொள்ள வேண்டு மென்றும் அடிக்கடி அமைச்சரால் சொல்லப்படுகின்றது. ஆயின், அறிவியல் முறைப்படி தமிழை ஆய்ந்து வளர்ப்பவர் பிழைப்பின்றிச் சாகவும், தமிழைக் காட்டிக் கொடுப்பவர் மேன் மேலுயர்ந்து வாழவுமே, இற்றைத் தமிழ்நாட்டு நிலைமை யுள்ளது. இத்தகை நிலைமையையே, நிை

66

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை

என்று முன்னோர் பாடிக் காட்டினர். இந்நிலைமையே நீடின், இனித் தமிழு மில்லை தமிழாராய்ச்சியு மில்லை. எல்லா மொழியுங் கலந்த கொடுங் கொச்சைக் கலவைதான் தமிழ் என்று வழங்கும்.

அதன்பின்,

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதைந்தாலும் சீரியவுன் பழையவிளஞ் செவ்விநினைந் தேத்துதுமே

என்றே பாட நேரும். இன்று நான் உடம்போடிருந்து இந் நூலெழுதுவதற்கு ஏதுவாயிருந்தவர், பாவலர் பெருஞ்சித்திரனார்,