157
செட்டிகுளத்து நெசவாசிரியர் திரு. நாகமுத்தனார், செங்காட்டுப் பட்டித் திரு. செந்தமிழ்க் கிழார், அன்னத்தாளக ஆசிரியர் திரு. முருகனார், என் மதுரை மணிவிழாக் குழுவார், புன்செய்ப் புளியம் பட்டிமறைமலையடிகள் மன்றத்தார், தவத்திருக் குன்றக்குடியடிகள்
ஆகியோரே.
தமிழுக்கு ஒரு நன்மையும் செய்யாதவர் தெருத் தெருவாக விலைக்கு வாங்கவும், தமிழுக்கே தம் வாழ்நாளைத் தத்தஞ் செய்தவர் ஏன் குடியிருக்க வாடகை வீடு தேடித் தெருத் தெருவாய் அலைய வேண்டும்?
முக்குலத்தார் கடமை
தமிழருள் மூவகுப்பார் முதன்மை யானவர். மரக்கறி வெள்ளாளர் நிறத்திலும் கல்வியிலும், நாட்டுக்கோட்டைச் செட்டி மார் செல்வத்திலும், மறவர் மறத்திலும் சிறந்தவராவர். இம் மூவகுப்பாரும் தமிழையும் தமிழப் பண்பாட்டையும் தமிழினத் தாரையுமே தாங்கிக் காத்தல் வேண்டும்.
ப
தமிழ்நாடு முன்னேறும் வழிகள்
தமிழகம் வரவரக் குன்றியமை
ஒரு காலத்தில், முழுகிப் போன தமிழ்நாடாகிய பழம் பாண்டி நாடும் நாவலந் தீவு என்னும் இந்தியா தேசமும் தமிழகமாயிருந்தன. பழம் பாண்டிநாடு மூழ்கியபின், விந்தியமலைக்கு வடக்கிலுள்ள நிலப்பகுதி பிராகிருதம் என்னும் வடதிரவிட நாடாகி, ஆரியர் வந்தபின் ஆரியா வர்த்தம் என்னும் ஆரிய நாடாக மாறிற்று.
அதன் பின், குசராத்தி மராட்டியம் ஒட்டாரம் (ஒரிசா) ஆகிய நாடுகள், முன்பு திரவிடமாக மாறிப் பின்பு ஆரியமாகத் திரிந்தன.
அதன்பின், வடுகம் என்னும் தெலுங்க நாடும் பின்னர்க் கன்ன நாடும் திரவிடமாக மாறின. கன்னடநாடு 7ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாடாகக் கருதப்பட்டது. அதனால், வடகன்னடத்திலுள்ள கோகர்ணம் அப்பர் சம்பந்தர் ஆகிய இருவரின் தேவாரப்பாடல் பெற்றது. அம் மட்டத்திற் கீழ்கரை வரையுள்ள இற்றைத் தெலுங்கு நிலமும், அன்று தமிழ் நிலமாயிருந்தது.
கன்னட நாடு தோன்றியபின், தெலுங்க நாட்டின் தென் எல்லை அல்லது தமிழகத்தின் வடஎல்லை, சற்றுத் தெற்கே தள்ளி வந்தது.
பன்னிரண்டாம் நூற்றாண்டின்பின், மூவேந்தர் தமிழ்நாடு களுள் ஒன்றான சேரநாடு, கேரளநாடு அல்லது மலையாள நாடு என்னும் திரவிட நாடாகப் பிரிந்துவிட்டது.