163
நெய்யாவியும் மின்விசையும் கொண்டியக்கும் பல்வேறு பொறி களையும் ஊர்திகளையும் புனைந்து, இற்றை அறிவியல்களைத் தோற்றுவித் திருக்கின்றனர். தமிழ்நாட்டிலோ, ஒரேயினம் ஆரியச் சூழ்ச்சியால் நூற்றுக்கணக்கான அகமணப் பிரிவுகளாகச் சிதைக்கப் பட்டுவிட்டதனால், இன்றும் தமிழர்
66
6 வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
99
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் (சிலப். 15:207-14) நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுபொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி முதலியனவுமான, முன்னோர் செய்த மதிற் பொறிகளையுஞ் செய்யத் தெரியாது, மாட்டுவண்டியும் குதிரைவண்டியும் நரவண்டியும் தொடர்வண்டிக் கூண்டுமே செய்யும் நிலையிலுள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள மக்கள் பெயரெல்லாம் பெயரளவில் வழங்குகின்றனவே யன்றி, தமிழ்நாட்டிற்போல் சேம்பர்லேன் முதலியார்,சர்ச்சில் செட்டியார், அத்திலீக் கவுண்டர், ஈடன் நாடார், வில்சன் பிள்ளை என்று பொருளற்ற வால்களுடன் வழங்குவதில்லை. ங்ஙனமே ஏனை நாடுகளிலும்.)
அன்றியும், அங்கு மக்கள் வகுப்பை வினவின், தொழிலடிப் படையில் உழவர் வணிகர் ஆசிரியர் கணக்கர் என்று சொல்லு கின்றனரேயன்றி, இங்குப்போல் ஆசிரியனைக் கம்மாளன் (ஆச்சாரி) என்றும், கணக்கனை வணிகன் (செட்டியார்) என்றும், கட்டட வேலை செய்பவனைப்படைத்தலைவன் (முதலியார்) என்றும்,தையற் காரனைப் பாடகன் (பாணன்) என்றும்,ஒரே வேலை செய்பவரைப் பல்வேறு தொழிற் குலத்தாராகவும், இல்வாழ்வானைத் துறவி (ஐயர்) என்றும் பகுத்தறிவின்றிச் சொல்வதில்லை.
இனி, மாணவனின் அறியாமையைப் போக்கி அவனுக்கு உண்மையான செய்திகளை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ள ஆசிரியன், மாந்தனூலும் (Anthropology) உடல்நூலும் (Physiology) கற்றவனா யிருப்பினும், அவற்றிற்கு மாறாக, பிறப்படிப்படையில் அவனை ஓர் இனமாகவும் (species) தன்னை மற்றோரினமாகவும் கூறுவதும், இங்ஙனமே கல்வியதிகாரியும் கல்வித்துறை இயக்குநரும் கல்வி அமைச்சரும் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகருங்