164
கூறுவதும், ஆசிரியன் மாணவனைப் பிறப்பில் தாழ்ந்தவ னென்றும் மாணவன் ஆசிரியனைப் பிறப்பில் தாழ்ந்தவனென்றும் கொள்வதும், எத்துணைக் கேடான செயல்! இத்தகைக் கல்வியால் ஒரு நாடு முன்னேற முடியுமோ?
பிறவிக்குலப் பிரிவினையால் விளையும் பெருங்கேடுகள்
(1) உலகுள்ள அளவும் ஒற்றுமை யின்மை.
(2) இன முன்னேற்ற மின்மை.
(3) தமிழ்மொழி யிலக்கிய வளர்ச்சி யின்மை. (4) தமிழப் பண்பாட் டழிவு.
(5) அடிமைத்தனமும் தாழ்வும் தொடர்கை.
(6) மதிவிளக்கமும் உடல் வலிமையுமுள்ள மகப்பேறின்மை. (7) அயலார்க்கும் தகுதியில்லார்க்கும் பதவிப் பேறு.
(8) பகுத்தறிவைப் பயன்படுத்தாமை.
ஒருவர் எத்துணை யுயரினும், தம்மை நாடார் என்று சொல்லிக் கொள்ளின், குல ஏணியில் அவருக்குரிய படியில்தான் அவரை வைப்பர். அதனால் அவர் வெள்ளாளரொடு உறவாட முடியாது. அங்ஙனமே, வெள்ளாளரும் எத்துணை உயர்வா யிருப்பினும், அவர் பிராமணருக்குத் தாழ்ந்தவராகவே கருதப்படுவர். ஆதலால், ஆரியக் குல ஏணியைத் தூள் தூளாக்கிச் சுட்டெரித்தல் வேண்டும்.
ஒரு குலத்தாரிடை ஒரு நற்பழக்க மிருப்பின், அதைப் பிறரும் மேற்கொள்ள வேண்டும்; தீப்பழக்கமிருப்பின் அதை விட்டொழிக்க வேண்டும்.நாகரிகம், துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம், அதிகாரம், மதிநுட்பம் முதலியவற்றாலேயே உண்மையான உயர்வு உண்டாகும். நான் கார்காத்த வெள்ளாளன் என்றும், நான் படைத்தலைக் கவுண்டன் என்றும் சொல்வதால் மட்டும் உயர்வுண்டாகாது. துருக்கியைத் திருத்தி முன்னேற்றிய கமால் பாசாபோல், ஒருவர் தமிழ்நாட்டிற்குத் தேவை. கல்வியறிவிற் சிறந்த அண்ணாதுரை யாரினும் ஆள்வினையிற் சிறந்த அருட்செல்வனார் (கருணாநிதி யார்), அப் பொறுப்பேற்றுக் குமுகாயத் துறை மேடுபள்ளங்களைச் சமப்படுத்தி, தாம் தமிழவேள் என்று நாட்டுவாரா?
66
நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லை
-
தொல்சிறப்பின்
ண்பொ ளொன்றோ தவங்கல்வி யான்வினை
99
யென்றிவற்றா னாகுங் குலம்.
(நாலடி. 195)