உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165


காலக் கடப்பு

உலகத்தில் முதன்முதல் தோன்றி நாகரிக விளக்கேற்றிய நாடு தமிழகம். பிந்தித் தோன்றிய நாடுகளெல்லாம் முன்னேறிவிட்டன.

ஆங்கில நாடு தோன்றியது 5ஆம் நூற்றாண்டு; முன்னேறியது 18ஆம் நூற்றாண்டு. அமெரிக்க ஒன்றிய நாடுகள் (U.S.A.) தோன்றியது 18ஆம் நூற்றாண்டு; முன்னேறியது 19ஆம் நூற்றாண்டு. அ.ஒ.நா. ஆங்கில நாட்டின் கான்முளையே.

பிரான்சு தோன்றியது கி.மு. 7ஆம் நூற்றாண்டு; முன்னேறியது கி.பி. 19ஆம் நூற்றாண்டு. செருமனி தோன்றியது கி.மு. 4ஆம் கி.மு.4ஆம் நூற்றாண்டு; முன்னேறியது 19ஆம் நூற்றாண்டு. இரசியா தோன் றியது கி.பி. முதலாம் நூற்றாண்டு; முன்னேறியது 20ஆம் நூற்றாண்டு. இவற்றின் முன்னேற்றத்திற் கெல்லாம் மூலம் ஆங்கில முன்னேற்றமே.

சப்பான் தோன்றியது தோரா.கி.மு. 2000; முன்னேறியது கி.பி. 19 ஆம் நூற்றாண்டு. சீனம் தோன்றியது தோரா.கி.மு. 20,000; தாள் செய்தது கி.பி. 2ஆம் நூற்றாண்டு; அச்சுப்பொறி புனைந்தது கி.பி. 6ஆம் நூற்றாண்டு;மேலையறிவியல் முறையில் முன்னேறியது 20ஆம் நூற்றாண்டு.

தமிழன் முதன் முதலடைந்த முன்னேற்றம் மூவாயிரம் ஆண்டாகத் தடுக்கப்பட்டுள்ளது. இன்றேல், அவன்தான் முதன் முதல் திங்களை யடைந்திருப்பான். இன்றுள்ள மக்கட்பெருக்க வேகம் தொடரின், அடுத்த நூற்றாண்டு கொடிய உணவுப் பஞ்சமும் உறையுட் பஞ்சமும் ஏற்படுமென்று, மக்கள் நூலார் (Demographers) அடிக்கடி வன்மையாக எச்சரித்து வருகின்றார். கிறித்தவ ஊழியர் உலக முடிவு நெருங்கிவிட்ட தென்கின்றனர். இந் நிலையிலும், கடத்திவையாது உடனே தமிழன் முன்னேற முயல வேண்டும். தமிழன் முன்னேற்றத் தடை

உயரப் பறக்கும் பருந்தின் காலிற் கட்டப்பட்டுள்ள பாறாங்கல் போல், தமிழன் உயர்முன்னேற்றத்தைத் தடுப்பது, பிராமண னுயர்வை அடிப்படையாகக் கொண்ட பிறவிக்குலப் பிரிவினையே.

பிராமணன் பிறப்பில் உயர்ந்தவன் அல்லன். அவன் எளிய இரப்போனாய் இங்கு வந்தவன். “முட்டிபுகும் பார்ப்பார்” என்று கம்பர் பாடியிருத்தல் காண்க. பண்டை வெண்ணிறமும் இன் றவனுக்கில்லை. இன்று வெள்ளையரா யிருப்பவர் ஐரோப்பியரும் அவர் வழியினருமே. மாந்தன் மூச்சொலியும் முழங்கொலியும் தம்மளவில் இறைவனுக் கேற்றவை யல்ல. கழுதை கத்தலும் அரிமா உரறலும் களிறு பிளிறலும் மாந்தனொலிகளினும் வலியன. இறைவனை இன்புறுத்துவது ஏழை யடியானின் தூய வுள்ளமே.