உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166


கல்லா அடியானின் திருந்தாச் சொல்லே, கடவுட்குக் குழலினும் யாழினும் இனிய மழலைமொழி. சிவநெறியும் திருமால் நெறியும் ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே தமிழர் கண்ட மதங்களே. என் ‘தமிழர் மதம்' என்னும் நூலில் இது விரிவாக விளக்கப் பெறும். வேதத்திற்கும் தமிழ் மதங்கட்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஆதலால், சிவனியன் என்றோ திருமாலியன் என்றோ, இரண்டிற்கும் பொதுவாகத் தென்மதத்தான் அல்லது தமிழ மதத்தான் என்றோதான் தமிழர் தம் மதத்தைத் தெரிவித்தல் வேண்டும். கிரேக்கத்திற்கு நெருங்கிய கீழையாரியமும், அதுவும் பிராகிருதமுங் கலந்த வேதமொழியும், வேதமொழியும் தமிழுங் கலந்த சமற்கிருதம் என்னும் இலக்கியமொழியும் தேவமொழியல்ல. அவற்றிற்கெல்லாம் மூலம் தமிழே.

தமிழன் ஒவ்வொருவனும் தான் பிறப்பில் தாழ்ந்தவன் அல்லன் என்று கருதி,

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தம் கருமமே கட்டளைக் கல்.

(குறள். 505)

என்னும் நெறிமுறையைக் கடைப்பிடித்தொழுக வேண்டும். அதுவே கார்டியன் முடிச்சறுக்கும் (Cutting the Gordian knot) வழி.

ஆரிய வேடனின் அயர்ந்தனை மறந்தனை சீரிய மொழிநூல் செவ்விதி னுணர்த்தலின் மூரிய பெருமையை முற்று முணர்ந்தினே பூரிய அடிமையைப் போக்குவை தமிழனே.

பிராமணியத்தால் தமிழன் முன்னேற்றம் மட்டுமன்றி, உலக வரலாறு (World History), குமுகாய, பண்பாட்டு மாந்தனூல் (Social and Cultural Anthropology), பொது மொழிநூல் (General Linguistics) என்னும் உலகந்தழுவிய மூவறிவியல் வளர்ச்சியும் தடைப்படுகின்றது.

தமிழ்நாட்டுப் பிராமணர்க்கு ஓர் அன்பெச்சரிக்கை அன்பர்காள்,

நும் முன்னோர், வேறெந் நாட்டிலும் அயலார் கையாளாத வலக்காரங்களைக் கையாண்டு, கள்ளங் கரவற்ற பண்டைத் தமிழ் மூவேந்தரையும் ஏமாற்றி வயப்படுத்தி, அவர் வாயிலாகத் தமிழரிடை நும் தன்னலச் சிறுதெய்வ வேள்வி மதத்தைப் புகுத்தி, அதனால் தமிழ் கெடவும் தமிழிலக்கியம் இறந்துபடவும்,தமிழர் இழிந்து சிதறிவிடவும் செய்துவிட்டனர். அத் தீத் தொழிலை, அறிவாராய்ச்சியும் உரிமை யுணர்ச்சியும் மிக்க இக் காலத்தும் நீவிர் தொடர்தல் இயலாத தொன்றாம்.