உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(4)

45

இது நாளிகேரம் என்னும் சொல்லினின்று கேரளம் என்னும் சால்லைத் திரிக்கும் வடமொழி வழக்கொத்ததே.

இவற்றை இடைச்செருகல் என்பார் இடைச்செருகலின் இயல்பை அறியார். இவை இடைச்செருகலாயின் நன்னூலார் இவற்றைப் பின்பற்றியிரார். இவை போன்ற தவற்றுப் புணர்ப்பும் பிரிப்பும் இன்னும் பலவுள. அவை யெல்லாம் என் 'தொல்காப்பிய விளக்கம்' என்னும் நூலில் விளக்கப்பெறும். உரியியலில் தீர்தல், தீர்த்தல், பழுது, முழுது என்னும் பெருவழக் கான உலகவழக்குச் சொற்களும், அருஞ் செய்யுட்சொற்கள் போல் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

(5) புணரியல் 17ஆம் நூற்பாவிற் சாரியை என்று கூறப்பட்டுள்ள வற்றுள், ஆன் அக்கு இக்கு என்பன சாரியையல்ல. இற்றுச் சாரியை குறிக்கப்பெறவில்லை. அற்றுச் சாரியை வற்றுச்சாரியை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவை யெல்லாம் என் தொல்காப்பிய விளக்கத்தில் விரிவாகக் கூறப்பெறும். பிள்ளையாட்டு

தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள பல புறத்துறைகள், பண்டைத் தமிழரின் மறத்தை மட்டுமன்றி, அக்காலத்துக் கோவரசிலுள்ள குடியாட்சி யுரிமையையுங் காட்டுவனவாயுள்.

66

வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற் கருளிய பிள்ளை யாட்டும்

என்னும்

கரந்தைத்துறையும்,

நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டிய,

66

அதன்

(தொல்.புறத். 60)

உரையில்

வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்றலை யொள்வாட் புதல்வற்கண் - டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர

99

என்னும் வெண்பாவும் பாராட்டி மகிழத்தக்கன. இது புறப்பொருள் வெண்பா மாலையில் முற்றும் மாற்றப்பட்டுச் சிறப்பிழந் துள்ளது.

தொல்காப்பிய நால்வகுப்பு

66

66

நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய.

99

(தொல்.1570)

அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்(கு) ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே.

99

(தொல்.1572)