உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

66

99

(தொல்.1574)

அந்த ணாளர்க் கரசுவரை வின்றே. படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும்

தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.

" வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.

99

99

(தொல்.1571)

(தொல்.1578)

(தொல்.1581)

ஆரிய நால்வரணப் பாகுபாடு தமிழகத்தில் மெள்ளமெள்ளப் புகுத்தப்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பிராமணரே அந்தண ராயினர். அவர்க்கு அரசுரிமையும் கொள்ளப்பட்டது. மற்ற மூவகுப் பும் முன்போலிருந்தன. வாணிகர்க்கு வைசியர் என்னும் வடசொல் வழங்கத் தொடங்கிற்று.

வேளாண் தலைவரான வேளிர்க்கு அல்லது குறுநில மன்னர்க்கு வேந்தர்க் குற்றுழிப் பிரிவுண்டு. அதனால்,

66

வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே.

99

(தொல்.1582)

66

வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும் தாரும் ஆரமுந் தேரும் வாளும்

மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய

99

(தொல்.1583)

என்று கூறப்பட்டது. இச் சிறப்பு பொதுமக்களான உழுதூண் வேளாளர்க் கில்லை யென்பது,

66

அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை'

என்பதனாற் பெறப்படும்.

தொல்காப்பிய அரங்கேற்றம்

99

(தொல்.1584)

தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரல்லர். மாணவராயின் அகத்தியரை அல்லது அகத்தியத்தைத் தம் நூலிற் குறித்திருப்பார். அகத்தியர் தலைமையிலேயே தொல்காப்பியமும் அரங்கேற்றப் பட்டிருக்கும். "முந்துநூல் கண்டு” என்றதற் கேற்ப, “என்மனார் புலவர்” என்று பலர்பாலிலேயே முன்னூலாசிரியரைத் தம் நூல் முழுதும் குறித்திருக்கின்றார். அகத்தியர்க்கும் தொல்காப்பியர்க்கும் இடைப்பட்ட காலம் ஏறத்தாழ ஐந்நூறாண்டாகும். முன்னவரின் மாணவரே பின்னவர் என்று கொண்டவர், அகத்தியரைப்பற்றித் தொல்காப்பியத்தில் ஒரு குறிப்புமின்மையால், அதற்குங் கரணியங் காட்டுவார்போல் ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.