உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

-

கொம்பு - கொப்பு கப்பு கப்பல் = பல கிளைகளைக் கொண்ட பாய்மரமுள்ள கலம்.

நாவி, நாவாய்-L. navis, navia, OF. navie, ME. navie, E. navy. Gk. naus.

நங்கூரம்-Gk. agkura, L. ancora, OE. ancor, E. anchor, Pers. langar.

ஆங்கில அகரமுதலியில், இச் சொற்கு agk(hook) என்னும் கிரேக்கச் சொல் மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அச் சொல்லும் அங்கு என்னும் தென்சொல்லின் திரிபே. அங்குதல் 6 வளைதல். அங்கு - அங்கணம் = வாட்டமான சாய்கடை.

முதன்முதல் தமிழகத்தினின்றே மேனாடுகட்குச் சரக்குகள் ஏற்றுமதியாயின என்பதற்கு, அரிசி, இஞ்சி என்னும் இரு சொற்களே போதிய சான்றாம்.

அரு - அரி = 1. சிறுமை. அரிநெல்லி (சிறுநெல்லி).

(பிங்.)

2. நுண்மை. “அரியே ஐம்மை." (தொல். 839)

3. அரிசி. “அரிசியும் வரியும் அரியென லாகும்”

அரி - அரிசி = 1. சிறியது. அரிசிப் பல் (சிறுபல்). 2. நெல் புல் (கம்பு) முதலிய கூலங்களின் உள்ளீடு.

அவரை துவரை முதலிய பயற்றம் பருப்புகளை நோக்க, நெல் புல் முதலிய தவசங்களின் அரிசி சிறியதாயிருத்தல் காண்க.

அரிசி-E. rice, ME. rys, Fris. rys, Du. rijst, rijs, rys, MLG. riis, ris, MHG. ris, G. reis, MSw. riis, Sw. and Da. ris, OF. ris, F. riz, It. riso, L. oriza, oryza, Gk. oruza, oruzon, Sp. and Pg. arroz, Arab. aruz, uruz. Bot. n. L. Oryza sativa.

நெல் தொன்றுதொட்டுத் தமிழகத்து விளைபொருள் என்பதும், அரிசி முதன்முதல் தமிழகத்தினின்றே மேனாடுகட்கு ஏற்றுமதியான தென்பதும் வெளிப்படை. அங்ஙனமிருந்தும், எருதந்துறை ஆங்கிலப் பேரகர முதலியில் (O.E.D.), ‘அரிசி’ தமிழ்ச்சொல் லென்று குறிக்கப்படாது, "probably of Oriental origin", என்றும் எருதந்துறைச் சிற்றகர முதலியில் (C.O.D.), "of oriental orig." என்றும் மட்டுமே குறிக்கப் பட்டுள்ளது.

இதற்குக் கரணியமா யிருந்தவர் ஆரியர் மட்டுமல்லர்; அவரடியா ரான வையாபுரிகளும் தன்னலப் புலிகளும் வணிகப் புலவரு மாவர். அண்ணாமலை பல்கலைக் கழகத்திற் பத்தாண்டு கட்கு முன்னரே என்னால் தொகுக்கப்படவிருந்த செந்தமிழ்ச் சொற் பிறப்பியற் பேரகர முதலி, சேதுப்பிள்ளையால் தடுக்கப்பட்டு விட்டது. அதை இன்னும் அப் பல்கலைக்கழகம் உணரவில்லை.