உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

இஞ்சிவேர்-Gk. ziggiberis, L. zingiber, gingiber, OE. gingifer, gingiber, E. ginger.

OF. gingibre, gingimbre, Mod. F. gingembre, Pr. gingibre, gingebre, Sp. gengibre, agengibre, Pg. gengivre, It. zenzevero, zenzero, gengero, gengiovo.

Arab. zanjabil, MDu. gengber, D. gember, MHG. ingewer, Ger. ngwer, MLG. engewer, Da. ingefeer, Sw. ingefara.

கோழிக்கோட்டிலிருந்த(Calicut) ஏற்றுமதியான பருத்தித் துணி ஆங்கிலத்திற் கலிக்கோ(Calico) என்று பெயர் பெற்றுள்ளது.

கடைக்கழகக் கால ஆரிய மீக்கூர்வு

பழங்குடிப் பேதைமை, மதப்பித்தம், கொடைமடம் என்னும் முக்குற்றமும் ஒருங்கு கொண்ட மூவேந்தரும், பகுத்தறிவைப் பயன் படுத்தாது பிராமணரை முற்றும் பின்பற்றியதனால், கடைக்கழகக் காலத்தில், மதவியல் குமுகாயவியல் மொழியியல் என்னும் முத்துறை யிலும், ஆரியம் மிக வேரூன்றிவிட்டது.

ஆரியப்படுத்தம்

(1) மதத்துறை

தமிழர், நால் வேதங்களையும் நான்முகமாகக் கொண்டதனால், அவனைத் திருமாலின் (கொப்பூழினின்று பிறந்த) மகனென்று தமிழ்த் தெய்வத்துடன் இணைத்துவிட்டனர்.

66

நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்

தாமைரப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி” (பெரும்பாண்.402-4) ஆரிய வேதங்கட்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்பும் இன் றேனும், சிவனே வேதங்களை யருளியதாகக் கூறப்பட்டது.

66

நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்

99

(அகம்.181)

முதுகுடுமிப் பெருவழுதி, கரிகால் வளவன், அரச வேள்வி (ராஜஸூய) வேட்ட பெருநற்கிள்ளி, பல்யானைச் செல்கெழு குட்டுவன், சேரன் செங்குட்டுவன் முதலிய தமிழவேந்தர், ஆவின் பாலிருக்க அங்கணநீர் குடிப்பார்போல், கோவிலில் வழிபடும் பருந்தேவ வழிபாட்டை விட்டுவிட்டுக் கொலைவேள்வி செய்யும் சிறுதெய்வ வழிபாட்டை மேற்கொண்டனர்.

கடல்வளர் புரிவளை புரையு மேனி

யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்

99

(புறம்.56)