உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மேற்கூறிய பதினாறு தானங்களும், தெய்வ விழா நாளாகிய திருநாளிலும் பிறந்த நாள், மணநாள், வெற்றிநாள் முதலிய பெருநாள் களிலும், அரசராற் கைம்மாறின்றிப் பிராமணத் தலைவர்க்குச் செய்யப் படும். பிராமணர் தெய்வத் தன்மையுள்ளவர் என்று நம்பப் பட்டதனால், அவர்க்குச் செய்யுந் தானம், கோவிற்குக் கொடுக்குங் காணிக்கைபோல் மதத் தொடர்பான நல்வினையாகக் கருதப்பட்டது.வேத அறிவிற்குத் தக்கவாறு பிராமணனுக்குச் சிறப்பு ஏற்பட்டது. கடைக்கழகக் காலத்திற் சேரன் செங்குட்டுவன் மாடலனுக்குக் கொடுத்த, ஆள்நிறைப் பொன் (50துலாம்) குறிக்கப்பட்ட சிலப்பதிகாரம் இறந்துபடாமல் உள்ளது. இன்னும் எத்தனை பிராமணர்க்கு எத்தனை வேந்தர் எத்தனை முறை அத் தானம் வழங்கினரோ, அறியோம்.

(2) குமுகாயத்துறை பிராமண வுயர்த்தம்

தொடக்கத்தில் பூணூ லும் குண்டிகையும் முக்கோலும் மணையும் கொண்டு திரியும் நாடோடிப் பிராமணர்க்கும், பின்னர் வேதமோதிய எல்லாப் பிராமணர்க்கும்,தமிழ்த் துறவியர்க்குரிய அந்தணன் முனிவன் என்னும் பெயர்களை மட்டுமன்றி, இறைவனுக்குரிய பகவன் கடவுள் என்னும் பெயர்களையும், ஆரியரும் தமிழரும் வழங்கத் தலைப்பட்டு விட்டனர்.

தம்மை அந்தணரென்று பெருமையாகச் சொல்லிக்கொண்ட கபிலர், வேதம் ஓதினவரோ அல்லரோ அறியோம். பொதுவாக, பார்ப்பான் என்னும் பெயர் இல்லறத்தார்க்கும், அந்தணன் என்னும் பெயர் துறவறத்தார்க்கும் உரியனவாகும். வேள்வித்துறை முற்றிப் பார்ப்பன வாகை சூடிய, சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனும், அந்தணன் என்னும் பெயரை மேற்கொண்டிலன். “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்" என்றே (1021) தொல்காப்பியருங் கூறுகின்றார். அங்ஙனமிருந்தும், பாரியொடு பழகினவரும்,

CC

புலவு நாற்றத்த பைந்தடி

பூநாற்றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு

99

(புறம்)

வந்தவருமான கபிலர் தம்மை அந்தணர் என்றது, இக்கால நிலைக்கு இயல்பாயினும் அக்கால நிலைக்கு வியப்பானதே.