உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

தமிழிலக்கிய வரலாறு

முகவுரை

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்”

(தண்டி. உரைமேற்கோள்)

என்று பாடினார் ஒரு பழம்புலவர். உலகில் முதன்முதல் மக்கட்கு என்று பாடினார் ஒரு பழம்புலவர். உலகில் தீந்தமிழை, தன்னே ஒள்ளிய நூல்களால் தெள்ளிய அறிவு புகட்டிய தீந்தமிழை, தன்னேரிலாத மொழியென்று புகழ்ந்தது தக்கதே. ஆயின், ஆரியம் அவ்வுண்மையை முற்றும் மறைத்து, தமிழை அடிமுதல் முடிவரை தருக்கப் பொருளாக்கி வைத்திருப்பதால், அப்போராட்டத்தாலும் தமிழ் தன்னே ரிலாததாகின்றது. இத்தகைய எதிர்ப்புநிலை வேறெம் மொழிக்குமில்லை.

தமிழ்நெடுங்கணக்கமைப்பு வடமொழி வண்ணமாலையைத் தழுவியதென்றும், தமிழ் வரிவடிவுகள் பிராமியெழுத்தினின்று திரிந்தவை யென்றும்;

தமிழ் அடிப்படைச் சொற்களெல்லாம் வடசொல் லென்றும்;

தொல்காப்பியம்பிராதிசாக்கியங்களையும்பாணினீயத்தையும் சமற்கிருத நாடக நூல்களையும் அலங்கார சாத்திரத்தையும் பிறவற்றையும் பின்பற்றியெழுந்த தென்றும், ஐந்திணை யென்னும் பகுப்பு வேதத்திற் ‘பஞ்சஜன' என்று சொல்லப் பட்டதே யென்றும்;

திருக்குறள், அறத்துப்பாலில் மனுதரும சாத்திரத்தையும் காமாந்தகர் நீதிசாரத்தையும், பொருட் பாலிற் கௌடிலியர்