உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

xi

அர்த்த சாத்திரத்தையும், காமத்துப் பாலில் வாற்சாயனர் காமசூத்திரத்தையும், தழுவிய தென்றும்; ஸ்ரீவல்லப என்பவரே திருவள்ளுவர் என்றும், முப்பால் என்பது திரிவர்க (ப) என்பதன் மொழிபெயர்ப்பென்றும்;

தமிழர் வணங்குந் தெற்வங்களெல்லாம் ஆரியத் தெய்வங்களென்றும், உருத்திரனை (ருத்ரனை)ச் சிவன் என்றும், விஷ்ணுவைத் திருமால் என்றும், சுப்பிரமணியனை முருகன் என்றும் தமிழர் மொழி பெயர்த்துக் கொண்டனர் அல்லது பெயர் மாற்றிக் கொண்டனர் என்றும்;

தேவார திருவாசக நாலாயிரத் தெய்வப் பனுவல்கல் வேதப்பொருளையே விளக்க வந்தன என்றும், பெரிய புராணமும் திருவிளையாடற்புராணமும் மெய்கண்டான் நூலும் வடநூல்களின் மொழி பெயர்ப் பென்றும்;

திராவிடர் என்பார், வேதவொழுக்கத்தினின்று வழுவி யிழிந்த சத்திரியருள் ஒருபிரிவாரே யென்றும், பாரதம் அல்லது சம்புத்தீவம் என்னும் ஆரிய தேசத்தின் தென்கோடி மண்டிலமே திராவிடம் என்றும், தமிழ்மொழி ஆரியத்திரிபான ஒருவகைப் பிராகிருதம் என்றும்;

இங்ஙனம் ஆனைகொன்றான் என்னும் மலைப்பாம்பு ஓர் யானை முழுவதையும் விழுங்கினாற் போன்று, இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்வி விட்டது. சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள் முதலியோர் தமிழைப் பேரளவு மீட்டிருப்பினும், மூல வையாபுரியாரும் வழிநிலை வையாபுரியாரும் அம்மீட்பின் பயனைப் பெரிதுங் கெடுத்துவிட்டனர். அக்கேட்டை நீக்கவும், இனிமேல் அத்தகைய கேடு என்றேனும் நேராதிருக்கவும், வரலாறு, மாந்தனூல் (Anthropology), மொழிநூல் ஆகிய முந்நூலடிப் படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

உண்மையான தமிழ் அல்லது தமிழிலக்கிய வரலாறு ஓர் உறழ்ச்சி நூலாகவே யிருக்க முடியும் என்பதை,

மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே