உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

என்னும் பனுவல்களும் அருணகிரிநாதர் அவற்றுள் திருவகுப்பும் வண்ணயாப்பினதே.

101

பாடியவையே,

கந்தரந்தாதி அருணகிரிநாதர் வில்லிபுத்தூராழ்வா ரொடு நிகழ்த்திய பாப்போரிற் பாடப்பட்டதென்றும், அதிலுள்ள தகரப்பாட்டிற்குப் பின்னவர் பொருளுரைக்க வியலாது தோற்றுப் போனாரென்றும், தோற்றவர் காது அறுபட வேண்டும் என்னும் முன் முடிபை அருணகிரிநாதர் தம் அருட்குணத்தால் நிறைவேற்ற வில்லை யென்றும், ஒரு கதை வழங்கிவருகின்றது “குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னீங்கில்லை” என்னும் பாட்டில் “குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி யெட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை” என்பதும், “அக்கிளிதான்-வில்லிபுத்தூரான் செவி யின்மே லறுவாள் பூட்டியன்று வல்லபத்தான் வாதுவென்று வந்ததுகாண் என்று கந்தப்பதேசிகர் பாடியதும், காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி” யென்னுந் தனிப்பாட்டுமே அதற்குச் சான்றாம்.

மேற்குறித்த தகரப்பாட்டு வருமாறு :

66

66

'திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.

99

செய்யுளின் ஒலிப்புமுறை ஓசை, வண்ணம், குழிப்பு வண்ணம் என மூவகைப்படும். அவற்றுள் வண்ண மென்பது, எல்லா வடியும் மாத்திரையும் எழுத்தினமுஞ் சீரும் ஒத்துவரப் பாடுவது. அதை நூற்றுக்கணக்கான வகையிற் பல்லாயிரமாகப் பாடுவது இறைவன் திருவருள் பெற்றவர்க்கே இயலும்.

"வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனவில்

தாக்கிற் றிருஞான சம்பந்தர் - நோக்கிற்கு நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார் சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

என்பது ஒரு தனிப்பாட்டு.

99

பாண்டிநாட்டிலுள்ள தேவாரம் பெற்ற 14 சிவநகர்களுள் தலைமையானது கூடல் என்னும் மதுரை.

"கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூர்

ஏடகநெல் வேலி யிராமேசம் ஆடானை

தென்பரங்குன் றஞ்சுழியல் தென்றிருப்புத் தூர்கானை வன்கொடுங் குன்றம்பூ வணம்.

99