உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தமிழ் இலக்கிய வரலாறு

மதுரைக்குரிய பழைய வரலாறுகளைப் புலப்படுத்தும்

வடமொழிப் பனுவல்களிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டவை திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், கடம்பவனபுராணம், சுந்தரபாண்டியம், திருவிளையாடற் புராணம், அட்டமிப் பிரதட்சிண மான்மியம் என்னும் ஐந்து. அவற்றுள்,

திருவால வாயுடையார் திருவிளையாடற்புராணம், 13ஆம் நூற்றாண்டில், செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவரால், உத்தர மகாபுராணம் என்னும் வடமொழிப் புராணத்தின் ஒரு பகுதியாகிய சாரசமுச்சயம் என்பதிலிருந்து, 1753 பாவிசை கொண்டதாக மொழிபெயர்த்துச் செய்யப் பட்டது. இது வேம்பத்தூரார் திருவிளையாடல் எனவும் வழங்கும்.

கடம்பவனபுராணம், தொண்டைநாட்டு இலம்பூரி லிருந்த வீமநாத பண்டிதரால், நீபாரண்ய மாஹாத்மியம் அல்லது கதம்பவன புராணம் என்னும் வடமொழிப் புராணத்திலிருந்து 1090 பாவிசை கொண்டதாக மொழி பெயர்த்துச் செய்யப்பட்டது. சுந்தரபாண்டியமும் திருவிளையாடற்புராணமும் 16ஆம் நூற்றாண்டுப் பகுதியிற் காண்க.

இராமசாமிப்

அட்டமிப் பிரதட்சிண மான்மியம் இ பிள்ளையால் உரைநடையாக மொழிபெயர்க்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டு

பதினாறாம் நூற்றாண்டில், தில்லையிலிருந்த மறைஞான சம்பந்தர் (கி.பி. 1555), என்னுந் துறவியார், சிவதருமோத்தரம் சைவசமயநெறி முதலிய நூல்களை இயற்றினார்.

தொண்டைநாட்டு வாயற்பதியூரில் வதிந்த அனதாரியப் பர் என்னும் புலவர், திருந்த வந்தவன் என்னும் வள்ளல் வேண்டுகோட்கிணங்கி, வடமொழியிலுள்ள சுந்தரபாண்டி யம் என்னும் மதுரை மான்மியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

மறைக்காட்டில் சிவாசாரியர் மரபிற் பிறந்த நிரம்பவழகிய தேசிகர் சேதுபுராணம் பாடினார். அதே மரபிற் பிறந்த பரஞ்சோதி முனிவர், வடமொழிக் காந்தத்தின் ஈச சங்கிதையிற் கூறப்பட்ட ஹாலாஸ்ய மான்மியத்தை மொழிபெயர்த்துத் திருவிளையாடற் புராணம் பாடினார். அவர் ஆரியக் கோட் பாடுடையவர் எனச் சொல்லப்படினும், நாட்டுப்படலத்தில்

(55-8),