உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

"கடுக்க வின்பெறு கண்டனுந் தென்திசை நோக்கி அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்க வாரமென் கால்திரு முகத்திடை வீசி மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ. "விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொ ழிக்குரைத் தாங்கியல் மலயமா முனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ.

99

"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்தா எண்ணவும் படுமோ.

99

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை உண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்

என்று பாடியிருப்பது மிகப் பாராட்டத்தக்கது.

99

103

நிரம்பவழகிய தேசிகரின் ஆசிரியராகிய ஆசிரியராகிய இராமநாத முனிவரின் மற்றொரு மாணவர் ஞானக்கூத்தர். அவர் பஞ்ச நதிப் புராணம் பாடினார். நிரம்பவழகிய தேசிகரின் மாணவ ருள் ஒருவராகிய சம்பந்த முனிவர் திருவாரூர்ப் புராணம் பாடினார்; மற்றொருவரான அதிவீரராம பாண்டியனார் (1565) கூர்ம புராணம், காசிக் காண்டம், இலிங்கபுராணம், மாக புராணம், திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி என்பவற்றைப் பாடினார். அவருடன் பிறந்தாரான வரதுங்கராம பாண்டியர் பிர மோத்தர காண்டம் பாடினார்.

திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் திருவொற்றியூர்ப் புராணம் பாடினார். அவரும் திருவுத்தரகோசமங்கைப் புராணம் பாடிய மாசிலாமணிச் சம்பந்தரும் கமல ஞானப் பிரகாசரின் மாணவராவர்.

திருவண்ணாமலைக் குகை யொன்றில் ஓகம் (யோகம்) செய்து கொண்டிருந்த குகை நமச்சிவாயர் என்னுஞ் சித்தர் அருணகிரி அந்தாதி பாடினார். அவர் மாணவரான குருநமச் சிவாயர் சிதம்பர வெண்பா, அண்ணாமலை வெண்பா, பரம ரகசியமாலை என்பவற்றைப் பாடினார்.