உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழ் இலக்கிய வரலாறு


5. திருவிருத்தம்

6. திருவாசிரியம் -

7. பெரிய திருவந்தாதி

8. திருவெழு கூற்றிருக்கை

9. சிறிய திருமடல்

10. பெரிய திருமடல்


}

நம்மாழ்வார்(9ஆம் நூற்.)

திருமங்கை யாழ்வார் (8ஆம் நூற்)

IV நாலாமாயிரம் அல்லது திருவாய்மொழி

திருவாய்மொழி -நம்மாழ்வார் (9ஆம் நூற்.)

காஞ்சிபுரத்திற் பிறந்த பொய்கையாழ்வார், திருக்கடன் மல்லை யென்னும் மாமல்லபுரத்திற் பிறந்த பூதத்தாழ்வார், மயிலையிற் பிறந்த பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும் ஒருகாலத்தவர். அம் மூவரும் ஒருநாள் மாலை பெண்ணை யாற்றங் கரையிலுள்ள திருக்கோவலூரையடைந்து, மிருகண்டு முனிவர் திருமாளிகையில் தங்க நேர்ந்தது. முதலிற் சென்ற பொய்கை யாழ்வார் அம் மாளிகையிலுள்ள இடுக்கமான இடைகழியிற் படுத்துக்கொண்டிருந்தார். அப்போது பூதத்தாழ் வார் அங்கு வந்து அவரைக் கண்டவுடன், பொய்கையாழ்வார் "இங்கு ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்” என்று சொல்லியெழுந்து கொண்டபின், இருவரும் உட்கார்ந்திருந் தனர். சற்றுப்பின்பு, பேயாழ்வாரும் அங்கு வந்தார். அப்போது முன்னையிருவரும் இங்கு ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம் என்று சொல்ல, பேயாழ்வாரும் இசைந்து, மூவரும் நின்று கொண்டிருந்தனர். பின்னர்ப் பெருமழையும் பேரிருட்டும் உண்டாகி, ஒரு பெரிய ஆள் அவரிடையே புகுந்து நெருக்குவது போன்ற உணர்ச்சி தோன்றிற்று. மூவரும் அது யாரென்று தெரியாது சிறிது நேரந் திகைத்து நின்றபின், அது இறைவன் திருவிளையாட்டே யென்று தம் அறிவைக் (ஞானக்) கண்ணாற்

66

கண்டு,

பொய்கை யாழ்வார்,

66

'வையந் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழி யானடிக்கே சூடினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே யென்று

என்றும், பூதத்தாழ்வார்,

99