உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

117


"அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா

-

நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்

என்றும், பேயாழ்வார்,

99

'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமுங் கண்டேன்

செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பா லின்று


என்றும் மூவெண்பாப் பாடினர். இம் மூன்றும் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந் திருவந்தாதி, மூன்றாந் திருவந்தாதி என்னும் தெய்வப் பனுவல்களின் தொடக்கப் பாவிசைகளாகும்.

திருமழிசையிற் பிறந்து காஞ்சியிற்போய் வதிந்திருந்த திருமழிசையாழ்வாரின் மாணவத்தொண்டரான கணிகண் ணனார் தெய்வப் புலமை யுள்ளவரென்றும், அவர் வாழ்த்தும் வாய்மொழியும் தப்பாது வாய்க்குமென்றும், அக்காலத்துப் பல்லவ அரசன் கேள்விப் பட்டு, “நான் என்றும் மாறாத இளமையாயிருக்க ஒரு பாப் பாட வேண்டும்” என்று அவரை வற்புறுத்தி வேண்ட, அவர் இறைவனையன்றி எம்மாந்தனை யும்

புகழாதவராதலால்,

66

'ஆடவர்கள் எங்ஙன் அகன்றொழிவார் வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா நீடியமால்

நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு

99

என்று, அவன் தலைநகராகிய காஞ்சியையே பாடினார். உடனே பல்லவன் வெகுண்டு, “நீ நம்மைப் பாடு என்றால், நகரத்தைப் பாடியிருக்கின்றாய். இனிமேல் இங்கிராதே. உடனே வெளியேறு” என்று அச்சுறுத்த, அவர் தம் ஆசிரியரான திருமழிசை யாழ் வாரிடம் சென்று நடந்ததைச் சொல்லி, விடை வேண்டினார். அப்போது ஆழ்வார் “நானும் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு உடன் வருவேன்” என்றுரைத்து, திருக் கோயிலுட் சென்று திருவடி தொழுது,

"கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடனே செந்நாப் புவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்’

99