உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தமிழ் இலக்கிய வரலாறு


என்று வேண்டியவுடன், அப் பெருமாளும் தம் அறிதுயில் டெழுந்து வர, மூவரும் அந் நகரைவிட்டு நீங்கி அருகி லுள்ள ஓரிடத்தில் தங்கினர். அதனால் நகர் முழுதும் பொலி விழந்து இருள் மூண்டது. அது கண்ட அரசன் அமைச்ச ரொடு சென்று, கணிகண்ணனார் காலில் விழுந்து தன் பிழை பொறுத்தருள வேண்டினான். அவரும் அவனை மன்னித்து, ஆழ்வாரை மீண்டும் எழுந்தருளுமாறு வேண்ட, அவரும் அதற்கிசைந்து,

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய

செந்நாப் புலவன்யான் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்

99

என்று மன்றாடி யிரந்து, பெருமாளையும் தம்மொடு மீளப் பண்ணினார். இதனால், காஞ்சிப்பெருமாளுக்குச் 'சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள்' என்னுந் திருப்பெயர் தோன்றிற்று.

திருமங்கையாழ்வார் திருவிண்ணகர யாத்திரை செய்து வருங்கால், சீகாழியில் திருஞான சம்பந்தரைத் தலைக்கூடித் தம் பாவன்மையால் அவரது பாராட்டுப் பெற்றாரென்று, ஒரு செய்தி அவர் வரலாற்றில் வழங்கி வருகின்றது.

பன்னீராழ்வாருள்ளும் தலைமையானவர் நம்மாழ்வார் என்பது. அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதனால், அவரை உடம்பாகவும் ஏனையரை உறுப்பாகவும் உருவகித்து, பூதத்தாழ்வாரைத் தலையென்றும், பொய்கை பேயாழ் வார்களைக் கண்க ளென்றும், பெரியாழ்வாரை முகமென்றும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தென்றும் குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் கைகளென்றும், தொண்ட ரடிப் பொடியாழ்வாரை மார்பென்றும், திருமங்கை யாழ்வாரைக் கொப்பூழென்றும், மதுரகவியாழ்வாரைப் பாதமென்றும், கூறுவது

மரபு.

இவ் வுருவகத்தில், கண்ணும் முகமும் தலையினின்று பிரிக்கப்பட்டிருப்பதும், இருபாதங்கட்கு அல்லது கால்கட்கு ஒருவரே குறிக்கப்பட்டிருப்பதும், இலக்கணப்படி யிழுக்காகு மாகையால், தலையை நம்மாழ்வாரென்றும், அரை இரு கால் ஒரு பாதம் ஆகிய நான்கும் ஏனை நாலாழ்வாரென்றும், உடம்பு முழுவதும் பரவி நிற்பவன் இறைவனாகிய திருமா லென்றும், கூறின் மிகப்பொருத்த மாயிருக்கும். கொப்பூழை வயிறென்று குறிப்பதும் நன்றாகும்.