இடைக்காலம்
137
1. உபதேச ரத்தினமாலை (71 வெண்பா)
.
2. ஆர்த்திப் பிரபந்தம் (60 வெண்பாவும் மண்டிலமும்) 3. திருவாய்மொழி நூற்றந்தாதி
என்னும் முப்பனுவல்களைப் பாடினார். உபதேசரத்தினமாலை ஆழ்வார் மாலிய ஆசிரியர் ஆகியவரின் ஊர் பேர் நாள் தொண்டு முதலியவற்றைக் கூறும். ஆர்த்திப் பிரபந்தம் இராமானுசரைச் சிறப்பாகப் போற்றிப் புகழும். திருவாய் மொழி நூற்றந்தாதி, திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்திற் கும் ஒன்றாக 100 வண்பாக் கொண்டு, பதிகத்தின் முதலீற்றுச் சொற்களையே வெண்பாவின் முதலீற்றுச் சொற்களாக அமைத்து அந்தாதித் தொடையிற் பாடியது.
அத்தியூர்க்கோவை
இது அத்தியூர் வரதரைப் பற்றியது. ஆசிரியர் தெரியவில்லை. 16ஆம் நூற்றாண்டு
செவ்வைச்சூடுவார் பாகவதம்
வேம்பற்றூரைச் சேர்ந்த செவ்வைச்சூடுவார் என்னும் பிராமணப் புலவர் 4973 பாடல்கொண்ட பாகவதம் ஒன்று பாடினார். அது பாகவத புராணம் எனவும் வழங்கும்.
நெல்லி நகர்த் தலைவராயிருந்த வரதராசையங்கார் என்னும் அருளாளதாசர் 9147 பாடல் கொண்ட பாகவதம் ஒன்று பாடினார். அது மகா பாகவதம் என வழங்கும்.
திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
திருக்குருகை யென்னும் ஆழ்வார் திருநகரியிற் பிறந்த தனால் அந்நகர்ப் பெயரை அடையாகப்பெற்ற இப் புலவர், மாறன் திருப்பதிக் கோவை, நம்மாழ்வார் மும்மணிக் கோவை, மாறன் கிளவிமணிமாலை, திருக்குருகை மான்மியம் என்னும் நாற்பனுவலைப் பாடினார்.
கூடற்புராணம்
இது மதுரையிலுள்ள கூடலழகர் கோயில்பற்றியது. இதன் ஆசிரியர் தெரியவில்லை.
இருசமய விளக்கம்
து தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த அரிகண்டபுரம் என்னும் ஊரில் காராளர் குலத்திற் பிறந்த பிறந்த அரிதாசர்