138
தமிழ் இலக்கிய வரலாறு
என்பவரால் இயற்றப்பட்டது. மாலியம் சிவனியம் ஆகிய இரு சமயத்தையும் ஒப்ப நோக்கி, மாலியமே சிறந்ததெனக் கூறுவது. கஞ்சவதைப் பரணி
து
து கண்ணபிரான் கஞ்சனைக் கொன்றதைக் கூறுவது. 17ஆம் நூற்றாண்டு
சோழநாட்டுத் திருமங்கை நகரிற் பிறந்து, வடநூல் தென்னூல்களை முற்றக்கற்று, இரட்டுறல் மடக்கு திரிபு முதலிய அணிகள் அமைய அந்தாதி யென்னும் அ
ஈறு தொடங்கித்
தாடையிற் பாடுவதிற் பேராற்றல் பெற்ற பிள்ளைப் பெரு மாளையங்கார் என்னும் அழகிய மணவாள தாசர், திருவரங்கத் தில் வதிந்து திருவரங்கப் பெருமாளையே பாடுவதென்றும் பூட்கைபூண்டு, திருவரங்கத் தந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவரங்கக் கலம்பகம், சீரங்கநாயக சீரங்கநாயக ரூசல் என்பவற்றை முன்னும் திருவேங்கடமாலை, திருவேங்கடத் தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி என்பவற்றைப் பின்னும் பாடினார். அவ் வெண்பனுவலும் அட்டபிரபந்தம் எனப்படும். அவையல்லாது, பரப்பிரம வேகம் என்னும் நூலும் திருநறையூர் நம்பி மேகவிடுதூது என்னும் பனுவலும், அவர் பாடினார் என்பர்.
எண்பனுவலுட் பிற்பட்ட நான்கும் அவர் பாடியதற்கு, பின் வருமாறு ஒரு கதை சொல்லப்படும்.
=
முதற்கண் திருவரங்கப் பெருமாளையே அவர் பாடி வந்ததனால், திருவேங்கடப் பெருமாளும் தம்மைப் பாடும்படி வேண்ட, அவர் “அரங்கனைப் பாடிய வாயாற் குரங்கனைப் பாடேன்" என்று மறுத்தார். குரங்கன் குரங்குகள் வாழும் திருவேங்கடத்திலுள்ள பெருமாள். எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஒருவனே யென்னும் உண்மையை உணர்த்தி அவரது குருட்டுத் தன்மையைப் போக்குதற்கு, பெருமாள் அவரைக் கண்ட மாலை நோய் பற்றவிட்டார். அதனாற் பெரும்பாடுபட்டு வருந்தியபின், புலவர் தம் தெய்வப் பழிப்புக் குற்றத்தை யுணர்ந்து, எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஒருவனேயென்று கண்டு வடமலையாகிய திருவேங்கடத்திலும் அதனையொத்த தென்மலையாகிய அழகர்மலையிலும் எழுந்தருளியிருக்கும் பெருமாளைப் பாடி, அதன்பின் தம் தெளிவை முற்றக்காட்ட நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியும் பாடத் தலைப்பட்டார்.