உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

139


இனி, திருவானைக் காவிற்கோவில் கொண்டுள்ள சிவ பெருமான் மீது பாட மறுத்துவிட்டார் என்றும் ஒரு வரலா றுள்ளது. அது வருமாறு:

திருவானைக்கவிலுள்ள

சிவப்பிராமணர் புலவரின் பாத்திறனைப்பற்றிக் கேள்விப்பட்டு, தம்மூர்ச் சிவபெருமான் மீதும் பாடவேண்ட, அவர் “யாம் அரங்கனைப் பாடிய வாயால் மற்றொரு குரங்கனைப் பாடுவதில்லை” என்று மறுத்துவிட்டார். இங்குக் குரங்கன் என்றது சிவனை. குரங்கம் = மான். குரங்கன் = கையில் மானை யேந்திய சிவன்.

ஒருநாள் திருவரங்கம் கோயிலைச் சேர்ந்த குரால் (கபிலை) திருவானைக்காப் புனத்துட் புகுந்து மேய்ந்தது. உடனே அங்கத்துச் சிவப்பிராமணர் அதைக் கட்டிவைத்து விட்டனர். திருவரங்கத் தார் சென்று கேட்டபோது, "புலவர் வந்தால்தான் விடுவோம்" என்றனர். அதைத் திருவரங்கத்தார் புலவரிடம் சொன்னபோது, அவர் “ஆனை துரத்தி வந்தாலும் ஆனைக் காவில் நுழையாதே” என்று பழமொழியும் இருக்கிறதே! நான் அங்கு வரேன். அவரே இங்கு வரட்டும்" என்று சொல்லி விட்டார். அதன்பின்

திருவானைக் காவாரே திருவரங்கம் சென்று “எம் சிவன்மீது பாப் பாடினால்தான் குராலை விடுவோம்” என்றனர். அதற்குப் புலவர் “பாடுவேன். முதலிற் குராலை விடும்” என்றார். அப்போது திருவானைக்காவர் "சரி. விடுகிறோம். நீர் பாடும் பாட்டில் இரண்டொரு சீரையேனும் முன்சொல்லும்” என்றனர். அதற்கு அவர் “மங்கை பாகன்” என்றார். உடனே குராலை விட்டு விட்டனர். ஆயின், அப் பாட்டு அச் சீர்களையே கொண்டு தொடங்கி,

"மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார்ப தத்துநீர் வனச மேவு முனிவனுக்கு மைந்த னான தில்லையோ செங்கையா லிரந்த வன்கபாலம் ஆர்அகற்றினார் செய்ய தாளின் மலர்அரன் சிரத்தி லான தில்லையோ வெங்கண் வேழம் மூலம் என்ன வந்த துங்கள் தேவனோ வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்த தில்லையோ அங்கண் ஞாலம் உண்டபோது வெள்ளி வெற்ப கன்றதோ ஆதலால் அரங்க னன்றி வேறுதெய்வ மில்லையே

என்று முடிந்தது. திருவானைக்காவர் பெரிதும் ஏமாற்ற மடைந்து எரிசினத்துடன் திரும்பினர்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சிவப்பழிப்பையே செய்கையாக் கொண்டவர் என்னுங் குற்றத்தை மறைத்து,