உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

147


66

"நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன்வ ரும்பொழுது நாடி வருமோ கூடுபோன பின்பவற்றாற் கொள்பய னென்னோ கூத்தன்பதங் குறித்துநின் றாடு பாம்பே

"சீயுமல முஞ்செறிசெந் நீரும் நிணமும்

66

99

சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடம துடைந்தால் நாயும்நரி யும்பெரிய பேயுங் கழுகும்

நமதென்றே தின்றிடுமென் றாடு பாம்பே”

கள்ளங்கொலை காமமாதி கண்டித் தவெல்லாம் கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து தெள்ளிதான வெட்டவெளிச் சிற்சொ ரூபத்தை தேர்ந்து பார்த்துச் சிந்தைதெளிந் தாடு பாம்பே "சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம்பல தந்திரம் புராணங்களைச் சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணான நூல்களேயென் றாடு பாம்பே"

குதம்பைச் சித்தர் பாடல் (15ஆம் நூற்.)

99

"வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்பார்க்குப் பட்டயம் ஏதுக்கடி ?-குதம்பாய்

பட்டயம் ஏதுக்கடி ?

"மெய்ப்பொருள் கண்டு விளங்கமெய்ஞ் ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி ?-குதம்பாய்

கற்பங்கள் ஏதுக்கடி ?

"காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடி ?-குதம்பாய்

கோலங்கள் ஏதுக்கடி ?

"மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்பார்க்குத்

தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?-குதம்பாய்

தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

"தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தார்க்குப் பின்னாசை ஏதுக்கடி ?-குதம்பாய்

பின்னாசை ஏதுக்கடி ?

கடுவெளிச் சித்தர் பாடல்

பல்லவி

பாவஞ்செய் யாதிரு நெஞ்சே

-

நாளைக்

கோபஞ்செய் தேயெமன் கொண்டோடிப் போவான்.