152
தமிழ் இலக்கிய வரலாறு
"இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்குந் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை – இனியறிந்தேன் காரணன்நீ கற்றவைநீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்"
என்றும் பாடி, இறுதியிற் குடந்தையில் தங்கித் திருச்சந்த விருத்தமும் நான்முகன் திருவந்தாதியும் பாடினர் என்றும் கூறுவர்.
சிவவாக்கியப் பாடலும் திருச்சந்த விருத்தமும் ஒரே யாப்பிலும் ஒரே சந்தத்திலும் இருப்பதுடன், ஐந்து பாட்டுகள் இரண்டிற்கும் பொதுவாயிருப்பது கவனிக்கத் தக்கது.
சிவ வாக்கியப் பாடல்கள்
66
99
99
"மூன்று முப்பத் தாறினோடு மூன்று மூன்று மாயமாய் மூன்று முத்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்த் தோன்று சோதி மூன்றதாய்த் துலக்க மில்விளக்கதாய் ஏன்றெ னாவி னுட்புகுந்த கென்கொ லோஎம் ஈசனே. "ஐந்து மைந்து மைந்துமா யல்ல வற்று ளாயுமாய் ஐந்து மூன்று மொன்றுமாய் நின்ற வாதி தேவனே ஐந்து மைந்து மைந்துமா யமைந்த னைத்து நின்றநீ ஐந்து மைந்து மாய நின்னை யாவர் காண வல்லரே. ஆறு மாறு மாறுமாயொ ரைந்து மைந்து மைந்துமாய் ஏறு சீரிரண்டு மூன்று மேழு மாறு மெட்டுமாய் வேறு வேறு ஞான மாகி மெய்யி னோடு பொய்யுமாய் ஊறு மோசை யாய மர்ந்த மாய மாய் மாயனே. “எட்டு மெட்டு மெட்டுமாயொ ரேழு மேழு மேழுமாய் எட்டு மூன்று மொன்று மாகி நின்ற வாதி தேவனே எட்டு மாய பாதமோ டிறைஞ்சி நின்ற வண்ணமே எட்டெழுத்து மோது வார்கள் அல்லல் நீங்கி நிற்பரே. “பத்தி னோடு பத்துமாயொ ரேழி னோடு மொன்பதாய் நத்தி நாற்றிசைக் குள்நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப் பத்து மாய கொத்த மோடு மத்தலமிக் காதிமால் பத்தர்கட் கலாது முத்தி முத்தி முத்தி யாகுமே?
திருச்சந்தப் பாடல்கள்
99
"மூன்று முப்ப தாறினோடொ ரைந்து மைந்து மைந்துமாய் மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் தோன்று சோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய் ஏன்றெ னாவியுட் புகுந்த தென்கொலோஎம் ஈசனே.'
""