இடைக்காலம்
153
"ஐந்து மைந்து மைந்துமாகி அல்லவற்று ளாயுமாய் ஐந்து மூன்று மொன்று மாகி நின்ற ஆதி தேவனே ஐந்து மைந்து மைந்து மாகி யந்தரத் தணைந்து நின்(று) ஐந்து மைந்து மாய நின்னை யாவர் காண வல்லரே.
66
99
99
'ஆறு மாறு மாறுமாயொ ரைந்து மைந்து மைந்துமாய் ஏறு சீரிரண்டு மூன்றும் ஏழு மாறு மெட்டுமாய் வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய் றொ டாசை யாய ஐந்தும் ஆய ஆய மாயனே. “எட்டு மெட்டு மெட்டுமாயொ ரேழு மேழு மேழுமாய் எட்டு மூன்று மொன்றுமாகி நின்ற ஆதி தேவனே எட்டி னாய பேதமோ டிறை ஞ்சிநின் றவன்பெயர் எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வான மாளவே. 'பத்தினோடு பத்துமாயொ ரேழினோடொ ரொன்பதாய் பத்தினால் திசைக்கண்நின்ற நாடுபெற்ற நன்மையாய் பத்தினாய தோற்றமோடொ ராற்றல் மிக்க ஆதிபால் பத்தரா மவர்க்கலாது முத்திமுற்ற லாகுமே?
99
மேற் குறித்த பாவிசை யைந்தும், சிவவாக்கியத்தில் தொடர்ந்தும் வரிசையாகவும், திருச்சந்த விருத்தத்தில் இடை யிட்டும் வரிசை தப்பியும், உள்ளன. முன்னதன் மண்டிலங்கள் விருத்தங்கள்) 529; பின்னதன் மண்டிலங்கள் 120 மட்டுமே.
கீழ்வரும் பாட்டு ஒருசொல் வேறுபட்டிருப்பினும், ரண்டிலும் பொருட் போங்கு ஒன்றே யென்பது தெளிவாம். வீடு வேறுபாடு (முக்தி விகற்பம்)
"ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மைசேர் போக முத்தி புண்ணியத்தில் முத்தி யன்றி முத்தியாய் நாக முற்ற சயனமாய் நலங் கடல் கடந்த தீ ஆக முத்தி யாகிநின்ற தென்கொல் ஆதி தேவனே.
99
(சிவவாக். 252)
"ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மைசேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய் நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்துமேல்
ஆக மூர்த்தியான வண்ணம் என்கொல் ஆதி தேவனே."
(திருச்சந். 17)
முத்தியென்ற சொல்லே ஏட்டுப் பிழையாய் மூர்த்தி
யென்று மாறியது போலும்!