உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

163


“உதயணன் கதையும் கலியாண கதையும் என் என்னும் அசைச்சொல்லா லிற்ற நிலைமண்டிலம்.’

(யாப்.வி.உரை,ப. 262)

இவற்றால், கலியாணன் கதை இயைபு வனப்பைச்

சேர்ந்ததாகத் தெரிகின்றது.

எம்பாவை

"கோழியுங் கூவின குக்கில் குரலியம்பும் தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்தி கூழை நனையக் குடைந்துங் குளிர்புனல்

ஊழியுள் மன்னுவோம் என்றேலோ ரெம்பாவாய்.

99

(யாப்.வி.உரை மேற். ப. 345)

தினின்று, திருப்பாவையும் திருவெம்பாவையும் போன்று ஒரு பாவைப்பனுவல் இருந்திறந்ததாக உய்த்துணரப்படுகின்றது. புத்தமத கண்டன நூல்

இங்ஙனம் ஓர் எதிர்நூல் இருந்ததாக உய்த்துணரப்படு

கின்றது.

(மு.அ.,த.இ.வரலாறு, 9ஆம் நூற். முதற்பாகம், ப. 405) 10ஆம் நூற்றாண்டு

நாரத சரிதை

இது இறந்துபட்ட ஒரு தொன்மம் (புராணம்).

து

அமிர்தபதி

இது இறந்துபட்ட ஒரு பாவியம் சூளாமணி

து தோலாமொழித்தேவர் என்னும் புலவர் பயாபதி என்னும் அரசனையும் அவன் புதல்வரான விசயன், திவிட்டன் என்னும் இரு மன்னரையும்பற்றிய கதையை, சருக்கம் என்னும் 12 பிரிவும் 2131 மண்டிலங்களும் (விருத்தங்களும்) கொண்ட தாகப் பாடிய பாவியம்.

இதை ஐஞ்சிறு பாவியங்களுள் ஒன்றாகக் கூறுவது வழக்கு. ஆயின், திறனாய்வுப் புலவர் அதை மறுத்து, இதையும் ஒரு பெரும் பாவியமாகக் கொள்வர்.