உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

1. மறைந்த குமரிக்கண்டம் (The Lost Lemuria)

"நம் ஞாலத்தின் மேற்பரப்பில், இன்று காய்ந்த நிலமா யிருப்பது, ஒரு காலத்திற் கடலடி நிலமாயும் இன்று கடலடி நிலமாயிருப்பது ஒரு காலத்திற் காய்ந்த நிலமாயும், இருந்ததென்று அறிவியலாற் பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. நிலநூலார் சிலவிடங்களில், இந்த நில மூழ்கல்களும் எழுச்சிகளும் நேர்ந்துள்ள நிலப்பரப்பின் திட்டவட்டமான பகுதிகளைக் குறித்துக் காட்டக் கூடியவராய் இருந்திருக்கின்றனர். மறைந்த அற்றிலாண்டிசுக் கண்டவுண்மை இதுவரை அறிவியலுலகிற் சிற்றளவே ஒப்பம் பெற்றிருப்பினும், இலெமுரியா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு பரந்த தென் கண்டம் வரலாற்றிற்கு முந்தியதொரு காலத்தில் இருந்தது பற்றி அறிவியலாரின் பொதுக் கருத்தொற்றுமை நீண்ட காலமாக இருந்து வருகின்றது.

99 1

2. குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம் (தோரா. கி.மு. 1,00,000)

66

"இந்துமாவாரி முன்பு ஒரு கண்டமாயிருந்தது. அது சந்தாத் தீவுகளிலிருந்து ஆசியாவின் தன்கரை வழியே ஆப்பிரிக்காவின் கிழக்குக்கரைவரை பரந்திருந்தது. இப்

பழங்காலக் கண்டத்திற்கு, அதில் வாழ்ந்திருந்த மாந்தன் போன்ற விலங்குகள்பற்றி, கிளேற்றர் (Sclater) என்னும் ஆங்கிலேயர் லெமுரியா (Lemuria) என்று பெயரிட்டிருக்கின்றார். அதோடு, அது மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்கக் கூடுமென்பது பற்றி, மிகுந்த முதன்மை வாய்ந்ததாகும்.

66

2

லெமுரியரே வரலாற்றிற்குத் தெரிந்த முதல் திட்ட வட்டமான மாந்தன் வகுப்பாரென்பதையும், இலெமுரியாக் கண்டமே மாந்தன் நாகரிகத்தின் உண்மையான பிறப்பிடம்

1. The Lost Lemuria by Scott Elliot., p. 1

2. History of Creation by Earnest Haeckel, Vol. I, p.361