உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

தமிழ் இலக்கிய வரலாறு

என்பதையும், கருதிப் பார்க்கும்போது, இலெமுரியாவினின்றும் அதன் மக்களினின்றுமே மாந்தனின் இற்றை வகுப்பினங் களெல்லாம் தோன்றியுள்ளன என்னும் இன்புறுத்தும் உண்மையைக் காண்கிறோம்.

99 3

"இன்றுள்ள ஐங்கண்டங்களுள், ஆத்திரேலியாவேனும் அமெரிக்காவேனும் ஐரோப்பாவேனும் (மாந்தனின்) இம் முந்தக மாகவோ ‘பரதீசு’ என்று சொல்லப்படும் விண்ணுலகமாகவோ மாந்த இனத்தின் பிறந்தகமாகவோ இருந்திருக்க முடியாது. பெரும்பாற் சூழ்நிலைகள் தென்னிந்தியாவையே நாடுமிடமாகக் காட்டுகின்றன. இன்றுள்ள கண்டங்களுள், ங்களுள், தென்னாசியா வல்லாது இவ்வகையிற் கருதக் கூடிய ஒரே கண்டம் ஆப்பிரிக் காவே. ஆயின், மாந்தனின் முந்தகம், கிழக்கில் அப்பாலை யிந்தியாவும் சந்தாத் தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கரையும் வரையும், ஆசியாவின் தென்கரை யொட்டி, அது இன்று உள்ள அளவு (ஒருகால் அதனொடு ஒன்றாக பரந்திருந்ததும், இன் ன்று று இந்துமாவாரியின்கீழ் மூழ்கிக் கிடப்பதுமான ஒரு கண்டமா யிருந்ததென்று உன்னுவிக்கும் சூழ்நிலைகள் (சிறப்பாக வட்டார வியல் உண்மைகள்) பல வுள்ளன. விலங்குகளும் நிலைத் திணையும் பற்றிய பல ஞலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டத்தின் முன்னுண்மையைப் பெரிதும் நம்பத் தக்க தாக்குகின்றன என்று, முன்பே கூறியுள்ளோம்...... இந்த இலெமுரியா மாந்தனின் முந்தகமா யிருந்ததென்று கொள்வதனால், மக்களினங் களின் நாடுபெயர்வா லேற்பட்ட ஞாலவியற் பாதீட்டின் விளக்கத்திற்கு மிகத் துணை செய்கின்றோம்.” 4

ணந்து)

4

மாந்தன் தோன்றி வாழ்தற்கும் படிப்படியாக நாகரிக வளர்ச்சியடைதற்கும் ஏற்ற நானில அமைப்பு, தென்னாட்டி லேயே

இன்றும் சிறப்பாகவுள்ளது.

இயற்கை அல்லது அநாகரிக மாந்தன், இயற்கையாக விளையும் காய்கனி கிழங்குகளையும் வேட்டையாடிப் பெறும் விலங்கு பறவை யிறைச்சியையும், உண்டு வாழ்வதற்கேற்ற இடம், குறிஞ்சி என்னும் மலைநிலம்; அதற்கடுத்தபடியாக, ஆடுமாடு களைச் சிறப்பாக வளர்த்தும் வான வாரிப் பயிர்களை விளைத்தும் வாழ்வதற்கு ஏற்ற இடம், புல்வெளியுங் குறுங்காடு முள்ள முல்லை நிலம்; அதற்கடுத்தபடியாக, நன்செய்ப் பயிர்

3. Lemuria - The Lost Continent of the Pacific, p.181 4. History of Creation, Vol. II, pp.125-6