உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

தமிழ் இலக்கிய வரலாறு


பிற்காலத்தார் பெயரொப்புமைபற்றி, இது சிவபெருமான் செய்த இலக்கண நூலென்று கதைகட்டிவிட்டனர்.

9ஆம் நூற்றாண்டு

புறப்பொருள் வெண்பாமாலை

து, சேரர்குடியைச் சேர்ந்த ஐயனாரிதனார் என்பவரால், கடைக்கழகக்கால நூலாகிய பன்னிரு படலத்தைப் பின்பற்றி, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்னும் 12 திணைகளையும் ஒழிபு என்னும் பகுதியையும்பற்றிய ப நூற்பாக்களையும் அவற்றின் பிரிவுகளான 330 துறை களையும், அத் துறைகளைப் பற்றிய 361 வெண்பாக்களையும் கொண்டு இயற்றப்பட்ட பிற்காலப் புறப்பொருள் இலக்கணநூல்.

19

இது இலக்கணநூல் எனப்படினும், எடுத்துக்காட்டுச் செய்யுள்களும் உடன் காண்டுள்ளமையால், இலக்கண விலக்கிய இணைநூல் என்பதே மிகப் பொருத்தமாம்.

தொல்காப்பியர் காலம் வரை, மாண்பொருள் அல்லது உறுதிப்பொருள் என்னும் அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கனுள், இன்பம் அகமென்றும், இம்மைக்குரிய அறமும் பொருளும் புறமென்றும்,மறுமைக்குரிய வீடு புறப்புறமென்றும், கைக்கிளையும் அன்பின் ஐந்திணையும் பெருந்திணையும் சேர்ந்த அகம் எழுதிணை யாதல்போலப் புறமும் வெட்சிமுதற் பாடாண் ஈறாக எழுதிணையே யென்றும், கொள்ளப்பட்டன.

அகத்துள், இருதலைக் காமமாகிய அன்பினைந்திணை சிறப்பாக அகமென்றும், ஒருதலைக்காமமும் பொருந்தாக் காமமுமாகிய ஏனையிரண்டும் அகப்புறமென்றும், கொள்ளப் பட்டன. புறத்துள், கரந்தை வெட்சியுள்ளும் நொச்சி உழிஞை யுள்ளும் அடக்கப்பட்டன. ஒருவன் ஆநிரை கவரும்போது கவரப்பட்டவன் அதை மீட்டலும், ஒருவன் முற்றுகையிடும் போது முற்றுகையிடப்பட்டவன் தன்னைக் காத்தலும், ஒருங்கே நிகழ்தலின், அவற்றைப் போர்க்களத்திற் பொரும்

இரு

படைகளின் செயல்போல ஒன்றாகவே கொண்டு ஒவ்வொரு திணையாகவே கூறினர் முன்னோர்.

66

"சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல

99

(புறம்.31)

என்பதனாலும், வீட்டிற்கும் அறமே துணையாதலாலும், அறத்தை னை முப்பொருட்பொது எனக் கூறினும் பொருந்தும்.