உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

183


பிற்காலப் புறப்பொருளிலக்கண நூலாரொருவர், தாம் புதுவதாக ஒரு பாகுபாடு செய்யக் கருதி, கரந்தையையும் நொச்சியையும் தனித் திணைகளாக்கியும், திணைகளாக்கியும், அகத்திற்குரிய கைக்கிளையையும் பெருந்திணையையும் புறத்திற் சேர்த்தும், பன்னிரண்டு என்னும் தொகை பெறப் பொதுவியல் என ஒன்றைத் தோற்று வித்தும், பன்னிரு படலம் இயற்றியதாகத் தெரிகின்றது.

சிவபெருமானுக்கு

வெள்ளிமலையில் (கைலாயத்தில்) திருமணம் நிகழ்ந்த தென்பதும், திருமண அவையின் பொறையைத் தாங்காது நாவலந்தீவின் வடபால் தாழத் தென்பால் உயர்ந்த தென்பதும், கும்பத்துட் பிறந்தவரும், பெருவிரலளவினருமான அகத்தியர் பொதிய மலைமேற் போய் நின்றவுடன் நிலம் சமநிலை யடைந்ததென்பதும், அகத்தியர் மாணவர் தொல்காப்பிய ருள்ளிட்ட பன்னிருவர் என்பதும், அப் பன்னிருவரே பன்னிரு படலம் இயற்றினர் என்பதும், இக்காலத்திற்கேற்காத இழிதகவான கட்டுக்கதைகள் எனக் கூறி விடுக்க.

ஆகவே,

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த

நுன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்

பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும்.....

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரப் பகுதி பகுத்தறிவுடையோர் கொள்ளத்தக்கதன்று.

சிவபெருமான் அருகிலிருக்கவும் தேவர் அகத்தியரை விடுக்க வேண்டினார் என்பது, சிறுவரும் நகையாடத்தக்க செய்தியே. ஒருகால், மணவாளப்பிள்ளைக் கோலத்திலிருந்த தனால், மகிழ்ச்சிமிக்கு மற்றொன்றையுங் கவனித்திலர் போலும்!

"கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப.

"வெட்சி தானே குறிஞ்சியது புறனே.

'வஞ்சி தானே முல்லையது புறனே. "உழிஞை தானே மருதத்துப் புறனே. "தும்பை தானே நெய்தலது புறனே.

99

99

99

99

(அகத். 1)

(புறத். 1)

(புறத்.6)

(புறத். 9)

(புறத். 14)