உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

தமிழ் இலக்கிய வரலாறு


99

"வாகை தானே பாலையது புறனே. "காஞ்சி தானே பெருந்திணைப் புறனே.

"பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

99

99

(புறத்.18)

(புறத். 22)

(புறத். 25)

என்று முதலிரு கழகநூல் வழக்குப்படி அறிவியன் முறையிற் கூறியுள்ளார் தொல்காப்பியர். அவர் இம் முறைக்கு மாறாக வேறொரு நூலோ நூற்பகுதியோ இயற்றியிருக்க முடியாது. அகத்தியரொடு தொடர்புபடுத்தினாற் பெருமையென்றும், எவரும் மறுக்காது ஒப்புக் கொள்வரென்றும், அகத்தியர் மாணவர் பன்னிருவர் என்னும் வழக்கு நோக்கியும், பன்னிருபடலம் பன்னிருவராற் செய்யப்பட்ட தென்று கதைகட்டப்பட்டுவிட்டது. புறப்பொருள் வெண்பாமாலைப் பன்னிரு படலத்தை எங்ஙனம் ஒருவரே இயற்றினாரோ, அங்ஙனமே அதற்கு முதனூலாயிருந்த பன்னிரு படலத்தையும் ஒருவரே இயற்றியிருத்தல் வேண்டும்.

ஐயனாரிதனார், தொல்காப்பியர் போல் அகத்திணை புறத் திணைகளை இதற்கிது புறமென்று எதிர்ப்படுத்திக் கூறவில்லை. கைக்கிளையை ஆண்பாற் கைக்கிளை பெண்பாற் கைக்கிளை யென்றும், பெருந்திணையைப் பெண்பாற் கூற்றுப் பெருந்திணை இருபாற் கூற்றுப் பெருந்திணை யென்றும், இவ்விரண்டாகப் பகுத்தாரேயன்றிப் தொடர்புபடுத்திக்

கூறவில்லை.

இறுதியில் இயற்றிய

புறப்பொருளோடு

"வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி

யுட்குடை யுழிஞை நொச்சி தும்பையென் றித்திறம் ஏழும் புறமென மொழிப

வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப் போகிய மூன்றும் புறப்புற மாகும்

99

(புறத்.19)

என்னும் நூற்பாவில், கைக்கிளை பெருந்திணையைப் பற்றி ஒரு குறிப்புமில்லை.

"வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கா

தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி அதுவளைத்த லாகும் உழிஞை - அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென் றதுவாகை யாம்”