248
தமிழ் இலக்கிய வரலாறு
சோமசுந்தர நாயகர் (1846-1901)
இவர் சென்னைச் சூளையில் வாழ்ந்த சிவநெறிச் செல்வர்; வடமொழி தென்மொழி யிரண்டிலுமுள்ள சமயநூல்களை முற்றக் கற்றவர்; ஏரண முறைப்படி தருக்கித்து எவரையும் எளிதில் வெல்ல வல்லவர்; பாற்கர சேதுபதியின் பேரவையின் கண் 'வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்' மாருதம்’ என்னும் பட்டம் பெற்றவர். இவருடைய ய நூல்களெல்லாம் சமயச்சார்பின வாதலால், வடசொற் கலப்பு மிகுந்திருக்கும்; ஆயினும் செய்யுள்களில் செந்தமிழ்ச் சொற்கள் விஞ்சியிருக்கும். தாமோதரம் பிள்ளை (1832 -1901)
-
இவர் ஆங்கிலப் பட்டக்கல்வி பெற்றிருந்ததனால், பல பெரு நூல்களைச் சீரிய முறையில் ஆய்ந்து வெளியி ஏதுவாயிற்று. இறையனா ரகப்பொருள், இலக்கண விளக்கம், தொல்காப்பியப் பொருளதிகாரம், சூளாமணி முதலிய பல நூல்களை அரிய ள ஆராய்ச்சியுரைகளுடன் பதிப்பித்தார். (ஜி.யூ.) போப்பு ஐயர் (1820-1903)
இவர்
நாலடியார், திருக்குறள், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்திற் செய்யுள் நடையில் மொழிபெயர்த்து, மேலையுலகத்தில் தமிழைப் பரப்பினார்; தம் கல்லறையில் 'தமிழ் மாணவர்' என்று பெயர் பொறிக்கச் சொன்னதினின்று, இவர் தமிழ்ப் பற்றின் பெருக்கை உய்த்துணரலாம்.
பெயர்ச்சிக் காலம் (Transition Period)
ஆங்கிலச் சார்புக்காலம், இந்தியா முழுமைக்கும், சிறப் பாகத் தமிழகத்திற்கு, கைவினை நாகரிகத்தினின்று பொறிவினை நாகரிகத்திற்கும், கீழைமுறைப் பொதுக்கல்வி யினின் மேை முறைப் பொதுக் கல்விக்கும், ஏட்டுச்சுவடி யினின்று அச்சுப்
பொத்தகத்திற்கும், இந்திய வாழ்க்கை முறையினின்று ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும், கோவர சாட்சியினின்று குடியர சாட்சிக்கும், பிறவிக்குலப் பிரிவினையினின்று தொழிற் குலப் பிரிவினைக்கும், அடிமைத்தனத்தினின்று உரிமைத்தனத் திற்கும், புராண வரலாற்றினின்று உண்மை வரலாற்றிற்கும், ஆரியவுயர்வினின்று தமிழவுயர்விற்கும், பெயர்ச்சிக் காலமாகும்.
இப் பெயர்ச்சிக்காலம், இதுவரை நாட்டுமக்களை ஏமாற்றி வாழ்ந்தவர்க்குப் பெருந்துன்பமாகத் தோன்றுவதும், ஏமாறி வாழ்ந்தவர்க்குப் பேரின்பமாகத் தோன்றுவதும், இயல்பே.