உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

நாடகம்

இசையொடு

நடி + அகம் = நாடகம்.

தமிழ் இலக்கிய வரலாறு

நடமும் நடிப்பும்

சேர்ந்தது நாட

நாடகம்.

நடம் என்பது, கதை தழுவியதும் தழுவாததும் என இருவகைத்து. நாடகம் என்பது பொதுவாக உலகவழக்கிற் கதை தழுவி வரும் நடிப்பையே குறிக்கும். கூத்து என்னும் பெயர் நடத்திற்கும் நாடகத்திற்கும் பொது. நடம் (நடனம்) என்பது ஆடல் என்றும் பெயர்பெறும்.

ஆடல்கள், நிலைத்தனவும்

அவ்வப்போது ஆடலா சிரியனாற் புதிதுபுதிதாய்ப் பயிற்றப்படுவனவும் என இருபாற் படும். நாடகமெல்லாம் புதிதுபுதிதாய்த் தோன்றுவனவே.

ஆடல்கள் வேத்தியல், வேத்தியல், பொதுவியல், தேவியல் என முத்திறப்படும். கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம், மல், குடம், பேடு, பாவை, பாண்டரங்கம், கொட்டி என்னும் பதினோராடலும், பிற்காலத்தில் தெய்வங்கள் ஆடினவாகக் கதைகள் கட்டப்பட்டு விட் L ன. குரவை, வரி என்பனவும் தேவியலின் பாற்படும்.

கை,

நடக்கரணங்கள் அறுபத்து நான்கு. நடவினைக் ஒற்றைக்கை (பிண்டிக்கை) ணைக்கை என இருவகைப்படும். ஒற்றைக்கை முப்பத்துமூன்று; இணைக்கை பதினைந்து.

நடிப்பிற்குரிய நளிநயம் (அபிநய) முப்பத்திரண்டு.

செய்யுட்கும் இன்னிசைக்கும் நாடகத்திற்கும் உரிய சுவைகள்: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு.

இன்னிசையிலும் நாடகத்திலும் குமரிநாட்டுத் தமிழர், ஆழ்ந்து ஈடுபட்டும் சிறந்த தேர்ச்சி பெற்றும் நிரம்ப இன்புற்றும் வந்ததனால், இன்னிசை நாடகத்தையும் தமிழொடு சேர்த்து, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முக்கூற்றதாக்கி முத்தமிழ் என்றனர். இத்தகைப் புணர்ப்பு வேறெந் நாட்டிலு மில்லை.

மருத்துவம்

ஊதை பித்துக் கோழை யென்னும் முந்நாடியியல்பை, தெய்வத்தன்மையான நுண்மாண் நுழைபுலத்தா லறிந்து, எல்லா நோய்கட்கும் மருத்துவம் அறுவை என்னும் இருவகைப் பண்டுவம்