உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

33

மான்றலை, மூதிரை, கழை, கொடிறு, அரவு, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங் கொளி, குருகு, முற்குளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்னும் இருபத்தெழு நாள்களையும்; மேழம், விடை, ஆடவை, அலவன், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்னும் பன்னீரோரைகளையும்; ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்), வியாழன், வெள்ளி, காரி (சனி) என்னும் ஏழு கோள் களையும், கண்டு, கணிய நூலை வளர்த்து வந்தனர்.

எழுகோள்களின் பெயரால் எழுநாட்கிழமை (வாரம்) வகுக்கப்பட்டது. அது உலக முழுதும் பரவி இன்றுவரை வழங்கி வருகின்றது.

கிழமைப் பெயர்கள் சமற்கிருதத்திலும், ஓரைப் பெயர்கள் சமற்கிருதத்திலும் இலத்தீனிலும், மொழி பெயர்க்கப்பட்டுள. இன்னிசை

முரல் (சுரம்), பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட ன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருந்தது.

பண் (எழுமுரல்), பண்ணியல் (அறுமுரல்), திறம் (ஐம்முரல்), திறத்திறம் (நான்முரல்) என நால்வகைப்பட்ட பண்கள் நரப்படைவால் 11,991 ஆகக் கணிக்கப்பட்டிருந்தன. ஆயப்பாலை, வட்டப் பாலை, சதுரப்பாலை, முக்கோணப் பாலை (திரிகோணப் பாலை) என்னும் நால்வகை முறையில், எழுபெரும்பாலைகளும் அவற்றின் கிளைகளும் திரிக்கப் பட்டன. அத் திரிவு முறைகள், முறையே முழுமுரல், அரை முரல், கால் முரல், அரைக்கால் முரல் ஆகிய முரல்நிலைகளைத் தழுவியன என்பர். இந் நுட்பங்கள் இற்றை இசைவாணர்க்குத் தெரியாவாறு, ஆரியத்தால் மறையுண்டு போயின.

=

தோல் துளை நரம்பு உறை (கஞ்சம்) என்னும் நால்வகை இசைக்கருவிகளுள் சிறந்தது நரப்புக் கருவி. நரப்புக் கருவிகளுள் சிறந்தது யாழ் என்னும் வீணை. யாழ்களுட் சிறந்தது செங்கோட்டி யாழ். அதன் வழியினதே இற்றை வீணை. விண்ணெனல் = நரம்பு தெறித்தல். விண்-வீண்-வீணை. தோலிற் சிறந்தது மத்தளம் (பெரியது) அல்லது மதங்கம் (மிருதங்கம்). துளையிற் சிறந்தது புல்லாங்குழல்.