உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தமிழ் இலக்கிய வரலாறு

மொழியிலக்கணம் நால்வகைப்பட்டதே. தமிழிலக்கணம் மட்டும், உலகில் முதன்முதல் இயற்றப்பட்டதேனும், சொற் றொடரும் செய்யுளும் நூலும் கூறும் பொருளுக்கும் இலக்கணங் கண்டதாகும்.

அகம், புறம் எனப் பொருள் இருபாற்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் எவ்வேழு திணைகளைக் கொண்டது. பொதுவாக, அகம் காதல் வாழ்க்கையையும், புறம் போர் வினையையும் கூறும். இவை யிரண்டுமல்லாத எல்லாப் பொருள்களும், வாகை யென்னும் புறத்திணைக்குள் அடக்கப் படும்.

கணக்கு

குமரிநாட்டுத் தமிழர் கணக்கில் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஒன்றிலிருந்து மேற்பட்டது மேல்வாயிலக்கம் என்றும், ஒன்றிற்குக் கீழ்ப்பட்டது கீழ்வாயிலக்கம் என்றும் சொல்லப் பட்ட ன.

கும்பம் = நூறு கோடி

சங்கம் (சங்கு) = இலக்கங் கோடி

தாமரை = கோடா கோடி

வாரணம் = நூறு கோடா கோடி (கோடா கோடி?)

இவற்றின் மதிப்பு வேறுவகையாகவுஞ் சொல்லப்படும். குவளை, வெள்ளம், ஆம்பல், நெய்தல் என்பனவும் அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் பேரெண்களாகும். கீழ்வாயிலக்கம் முக்கால், அரை, கால், அரைக்கால், மாகாணி (வீசம்), (1/20), காணி (1/80), முந்திரி (1/320), கீழ்முந்திரி (முந்திரியில் 1/320) 6TOT LIGOT.

மா

சிற்றிலக்கத்திற்கும் பேரிலக்கத்திற்கும் பெருக்கல் வாய் பாடிருந்தது போன்றே, சதுர வாய்பாடும் இருந்தது. அது குழிக்கணக்கு எனப்பட்டது. சிற்றிலக்கக் குழிப்புச் சிறுகுழி யென்றும், பேரிலக்கக் குழிப்புப் பெருங்குழி யென்றும், பெயர் பெற்றன.

கணியம்

குமரிநாட்டுத் தமிழக் கணியர் நுழை மதியருங் கூர்ங் கண்ணருமாயிருந்ததனால் புரவி, அடுப்பு, ஆரல், சகடு,