உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

31

பிறப்பிலேயே அமைந்துவிடுகின்றன. ஆதலால், பெரியோரைப் புகழ்தலும் சிறியோரை இகழ்தலும் தக்கதன்று.

ஒவ்வொருவரும் தம்மைப் போற் பிறரைக் கருதுதல் வேண்டும். இறந்தபின் உடன் வருவன அவரவர் செய்த இருவகை வினைகளே.

அரசியல்

அரசர் தம்மை உயிராகவும் தம் குடிகளை உடம்பாகவும் கருதி, ஐம்பெருங்குழு, எண்பேராயம், ஐவகை உறுதிச் சுற்றம், நால்வகைப் படை, நால்வகை யரண் ஆகியவற்றைத் துணைக் கொண்டு, நடுநிலையாக முறைசெய்து செங்கோலாட்சி செய்து வந்தனர்.

பொதுக்கல்வி

இக்காலத்திற்போல் அரசியலுறுப்பான பொதுக்கல்வித் திணைக்களம் அக்காலத்தில் இல்லையேனும், ஏறத்தாழ எல்லாரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருந்தனர். பாட்டாளியுட்படப் பல தொழிலாரும் பாவலராகவு மிருந்தனர்.

செய்யுள்

அக்காலத் திலக்கிய மெல்லாம் செய்யுளாகவே யிருந்தது. அது வெண்பா, ஆசிரியப்பா (அகவற்பா), கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களாக வழங்கிற்று. செய்யுள் நூலிற்குப் பொருள் கூறும் உரையும் எளிய செய்யுளாகவே யிருந்தது. வெண்பாவிற்கும் கலிப்பாவிற்கும் இணையான யாப்புவகை வேறெம்மொழியிலும் காணவியலாது.

மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம் எனச் செய்யுளுறுப்பு கள் இருபத்தாறாகக் கொள்ளப்பட்டன.

இலக்கணம்

அறிவியல்

எத்துணைச் சிறந்தனவேனும், ஏனை யுயர்தனிச் செம்மொழிகளிலெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என