உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தமிழ் இலக்கிய வரலாறு

(மிளகு) நீர், நீட்டாணம் (soup), சாறு, குழம்பு, கூட்டு என்பன குழம்பு வகையில் முறையே ஒன்றினொன்று திண்ணியவை.

பல்வகைக் காய்களும் மீனும் இறைச்சியும், வாட்டல், வதக்கல், வறுவல், பொரியல், துவட்டல், புரட்டல், அவியல், ஒடியல் எனப் பல்வேறு முறையில் கறியாக்கப்பட்டன.

குழம்பிற்கும் கறிக்கும் இறுதிவினை தாளிப்பு (உசிலிப்பு). அதற்கு எண்ணெயும் ஆநெய்யும் பயன்படுத்தப்பட்டன.

இறைச்சி வகையில், “முழுவுடும்பு, முக்கால் காடை, அரை கோழி, கால் ஆடு” என்பது பழமொழி.

அணி

பொன்னும் முத்தும் மணியும் குமரிநாட்டில் ஏராள மாய்க் கிடைத்தன. நுண்ணிய ஓவிய வேலைப்பாடுள்ள அணிகளும் கலங்களும் தட்டுமுட்டுகளும் உருவங்களும் செய்யப்பட்டன. கைத்தொழில்

எல்லாத் தொழில்களையுஞ் செவ்வையாகச் செய்தற்கு, இரும்பினாலும் செம்பினாலும் வெண்கலத்தினாலும் சிறந்த கருவிகள் செய்யப்பட்டன. இரும்பு முதன்முதல் தமிழகத் திலேயே கண்டுபிடிக்கப்பட்ட தென்பதற்கு, அதன் தமிழ்ப் பெயர் ஆரிய மொழிகளில் வழங்குவதே சான்றாம்.

E. iron, OE. iren, isen, Ger. eisen, Skt. ayas.

மக்கட் கருத்துகள்

ஒவ்வொருவரும் பால் வகுப்பு வேறுபாடின்றி அறம் பொருளின்பம் வீடு அடைதல் வேண்டும். எந்தவூரும் சொந்தவூர். எல்லாரும் ஓரினம். அறிவாற்றல் குணஞ்செயல் களாலன்றிப் பிறப்பாற் சிறப்பில்லை. ஒருவனுக்குப் பெருமை யும் சிறுமையும் தன்னாலேயே வரும். இன்பமும் துன்பமும் வருதற்கு அவரவர் பழவினையே காரணம்; பிறரல்லர். பிறந்தவையெல்லாம் இறக்கும். அதற்கு அஞ்சல் கூடாது. அது ஒரு நிலைமையினின்று இன்னொரு நிலைமைக்குப் புகு வாயிலே. ஒவ்வொருவர்க்கும் வாழ்க்கையில் ஒரு கடமையுண்டு. அது நிறைவேறியபின் இறப்பு வரும்.

உடலுழைப்பிற்கும் மனவுழைப்பிற்கும் உயர்பதவிக்கும் திறமைகளும்

தாழ்பதவிக்கும் ஏற்றவாறு, குணங்களும்