உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

45

வை தமிழ்ப் பண்டிதர் கோ. வடிவேலுச் செட்டியாரின் தருக்க பரிபாஷைப் பதிப்பிற் கண்டவை. ஏரணம் என்பது தருக்க நூலைக் குறிக்கும் தூய தென்சொல். இச் சொல் சமற் கிருதத்தில் ன்மை கவனிக்கத் தக்கது.

66

ஏரணங்காண் என்பர் எண்ணர்” என்னும் திருச்சிற்றம் பலக் கோவைச் சாத்துப்பாத் தொடரும்,

99

"ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம் தாரணம் மறமே சந்தம் தம்பம்நீர் நிலம்உ லோகம் மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள என்னும் தனிப்பாடலும், பண்டைத் தமிழிலக்கியத்தில் தருக்கநூல் இருந்தமையையும், அதன் பெயர் ஏரணம் என்பதனையும், தெளிவாகக் காட்டும்.

ரு

தமிழிலுள்ள ஏரணநூல் ஒரே வகையே. வடமொழி யிலுள்ள தருக்க நூல் வைசேடிகம், நையாயிகம் என வகைப்படும். அவற்றை முறையே சிறப்பிகம், முறையிகம் எனலாம். தமிழ் ஏரணம் சிறப்பிக முறைப்பட்டதாகும். உறழும் அல்லது தருக்கும்வகை பொதுவாயினும், அடிப்படைப் பொருட் பாகுபாட்டை நோக்கின், சிறப்பிக முறையே சிறந்த தும், முந்தியதுமாகும். எல்லாப் பொருள்களையும், முறையிக முறைப்படி பதினாறு வகையாகப் பகுப்பதினும், சிறப்பிக முறைப்படி எழுவகையாகப் பகுப்பதே முழுநிறைவாயும் டைவெளியில்லதாயும் ஒன்றையொன்று தழுவாததாயு மிருத்தல்

காண்க.

=

ஏரணம் (Logic) என்னும் சொல் மட்டுமன்றித் தருக்கம் (Debate) என்னுஞ் சொல்லும், தமிழாயிருப்பது கவனிக்கத்தக்கது. ஏர்தல் எழுதல். ஏரணம் = சொற்போரில் ஒருவன் தன் பகைவன்மீது எழுச்சி கொள்வதற்கு ஏதுவான முறைகளைக் கற்பிக்கும் நூல்.

துள்-துளிர். 2. செழித்தல்.

துளிர்த்தல்

1.

கொழுந்துவிடுதல்,

துளிர்-தளிர்.

தளிர்த்தல்

||

1.

கொழுந்து

விடுதல்,

2. தழைத்தல்.

99

"மாரியால் வற்றி நின்ற சந்தனந் தளிர்த்த தேபோல்.

(சீவக. 545)