உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

3. செழித்தல்.

-

துள்-தள் தள. தளதளத்தல்

கொழுத்தல்.

தள்-தழு-தழை. தழைத்தல்

=

தமிழ் இலக்கிய வரலாறு

பருமையாதல், கொழு

1. செழித்தல், 2. மிகுதல்.

“மைத்தழையா நின்ற மாமிடற் றம்பலவன்” (திருக்கோவை, 102), 3. வளர்தல். “மெய்தழை கற்பை” (திருவிளை. வளைய. 15).

தழு தழுக்கு. தழுக்குதல்

=

செழிப்புறுதல்.

"தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்

99

(திருமந்.254).

தழுக்கு - தருக்கு. தருக்குதல் = 1. மிகுத்தல். = 1. மிகுத்தல். “தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்து.” (தொல். அகத். 50), 2. ஊக்கம் மிகுத்தல். “வெம்போர்த் தருக்கினார் மைந்தர்.” (சீவக. 1679), 3. அகங்கரித்தல். “தன்னை வியந்து தருக்கலும்” (திரிகடு. 38).

தருக்கு - தருக்கம் = தன் கூற்றை மிகுக்கும் சொற்போர். தருக்கு செருக்கு = அகங்காரம்.

-

தருக்கு - வ. தர்க். தருக்கம் வ. தர்க்க. தருக்கு என்னும் சொற்கு வடமொழியில் மூலமின்மை கவனிக்கத் தக்கது.

மேற்காட்டிய ஏரண நூற்பாக்கள் அகத்தியத் தருக்க நூற்பாக்களல்லாவிடினும், தருக்க நூலை வளர்த்தற்கேற்ற அடிப்படை நிறைவாயமைந்திருத்தல் காண்க. அவை மிகப் பழையனவாயிருத்தல் பற்றியே அகத்தியர் பெயரில் வழங்கு

கின்றன.

அவற்றில் வரும் வடசொற்கள் மிகச் சிலவாயிருப்பது கவனிக்கத் தக்கது.

அவ் வடசொற்கட்கு நேர் தென்சொற்கள் வருமாறு:

வடசொல்

ஆசை

ஆன்மா

வாதனை

காரியம்

பிருதிவி

நித்தியம்

அநித்தியம்

விடயம்

தென்சொல்

மாதிரம், திகை

ஆதன், உறவி, புலம்பன்

வாடை

கருமியம்

புடவி

நிற்றியம்

அநிற்றியம், நிலையாமை புலனம், இடையாட்டம்