உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

தமிழ் இலக்கிய வரலாறு

"சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும் சவுந்தர பாண்டியன் எனுந்தமிழ் நாடனும் சங்கப் புலவரும் தழைத்தினி திருந்தது மங்கலப் பாண்டி வளநா டென்ப.

"உங்களிலே நானொருவ னொப்பேனோ வொவ்வேனோ திங்கட் குலனறியச் செப்புங்கள்

-

சங்கத்துப்

பாடுகின்ற முத்தமிழ்க்கென் பைந்தமிழு மொக்குமோ ஏடவிழ்தா ரேழெழுவீ ரின்று.

99

-

மாவேந்தன்

"பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப் பாவேந்த ருண்டென்னும் பான்மைதான் மாற னறிய மதுரா புரித்தமிழோர் வீறணையே சற்றே மித

என்பவை, 12ஆம் நூற்றாண்டினரான பொய்யாமொழிப் புலவர், மதுரையிற் கடைக்கழகப் புலவரின் கற்படிமையையும் கழகப் பலகையையும் நோக்கிப் பாடியன.

இவையெல்லாம் கடைக்கழகத்தையே பற்றியவை யேனும், முதலிரு கழகமும் பாண்டியர் நிறுவினவேயென் பதைக் குறிப்பாக வுணர்த்துவன வாகும், இந்துமாவாரியில் மூழ்கிப் போன தமிழ் நிலமெல்லாம் பாண்டிநாடேயாதலின், அதில் சேர சோழர் எவ்வகை யிலேனும் இருந்திருக்க முடியாது. இறையனா ரகப்பொருளுரை முக்கழக வரலாறு, “தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் பாண்டியர்கள்” என்றே தொடங்கு தல் காண்க.

5. தலைக்கழகம் (தோரா. கி.மு. 10,000-5,000)

ரீஇயினார்

இறையனா ரகப்பொருளுரையிலுள்ள முச்சங்க வரலாறு

தலைச்சங்கம்

"தலைச்சங்கம்

இடை டச்சங்கங்

கடைச்சங்கமென

மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினா ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரி பாடலும்