உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காலம்

65

முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற் றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவர்களைச் சங்கமிரீ இயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன் பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.’

இதன் விளக்கம்

கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்பது பிற்காலத்துச் சமற்கிருதச் சொல்லாதலால், அச் சொல்லே அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கியிருக்க முடியாது. ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்தகாலம் தோரா. கி. மு. 1500. அதற்கு நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டிற்குப் பின்னரே, வேத ஆரியமுந் தமிழுங் கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய வழக்கு வகைமொழி (Dialect) தோன்றிற்று. சமற்கிருதம் என்னுஞ் சொல்லே கலந்து செய்யப் பட்டது என்னும் பொருளதே.

அம்பலம், அமை-அவை, ஆயம், கடிகை, களம், களரி, கழகு- கழகம், குழு, குழாம், குழுமல்-குழுவல், குறி, கூட்டு-கூட்டம், கூடல், கோட்டி, சேகரம், தொகை, பண்ணை, பொது-பொதியம், மன்று- மன்றம் என்னும் சொற்களுள் ஒன்றே அக்காலத்துக் கழகத்தைக் குறிக்க வழங்கியிருத்தல் வேண்டும்.

முதலிரு கழகமும் மூழ்கிய பின்னரே அகத்தியர் தென்னாடு வந்ததனால், அவர் தலைக்கழகத்தில் இருந்திருக்க முடியாது. இடைக்கழக விருக்கையை மூழ்குவித்த இரண்டாங் கடல் கோளுக்குத் தப்பிய மாவேந்த (மகேந்திர) மலையும், அகத்தியர் வந்தபின் முழுகிவிட்டது. அதனால் அவர் பொதிய மலையிலேயே நிலையாக வதிய நேர்ந்தது.

66

L

‘அந்த மலய மலையினது உச்சியில் வீற்றிருக்கிறவரும், சூரிய பகவானைப் போல மிகுந்த ஒளியுடன் விளங்குபவரு மான, அகஸ்திய முனிவர் பெருமானைக் காண்பீர்கள் சாகரத்தின் மத்தியில் அகஸ்தியரால் வைக்கப்பட்டதும். அழகிய பல மரங்களடர்ந்ததும், அழகிய பொன்மயமானதும், மலைகளில் சிறந்ததெனத் திரிலோகப் பிரசித்தி பெற்றதுமான, மகேந்திரம் என்னும் பர்வதம் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கின்றது” என்று சுக்கிரீவன் சீதையைத் தேடித் தென்றிசை சென்ற வானரப் படையை