உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

                      இராகம்:- இந்தோளம்

வட்டங் கொடுத்த நிலவோ எனத்தக்க
            மாமுகத்தாள்
சட்டங் கொடுத்தும் புவியாவும் ஆண்டிடும்
            சக்கரத்தாள்
இட்டங் கொடுத்தும் எலாங் கொடுத்துங்
            காளமேகமெனும்
பட்டங் கொடுத்து நடந்தாள் பெரிய
            பதம் கொடுத்தே.


                                 சூரியனைப் பார்த்து.

                                இராகம்:- தோடி

நாணுகின்றேன் என்று தன்முகங் காட்டிடும்
             நங்கையைப்போல்
பேணுகின்றேனென் றலைமீ துதிக்கின்ற
             பேரொளியில்
பூணுகின்றேனென்று பொன்னாடை பெற்றனள்
             பூ மடந்தை
காணுகின்றேன் அதில் என்னன்னை
             முக்கணிற்கண் ஒன்றையே.



                              காளமேகம்.

இராகம்:- கனடா

தாளம்:- ஆதி



கொஞ்சும் கிளிகள் பார் கீதங்கள் கேள்
              கோதை மோகனா நீ
     
        வஞ்சமாகிய பூலோக வாழ்வில்
        நல்வாழ்வு காதல் வாழ்வன்றோ
                  தங்கிய இன்ப உலகில்
                 சஞ்சரிக்க நீ வாடி
     பொங்குதேயடி ஆனந்தம்
     பூங்காவனக் குயிலே மயிலே (கொஞ்சும்)