பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺器 கருணாகரி எனை ஆதரி கதி வேறில்லை பூர் பராபரி சரணாலயம் என் பாக்கியம் தாயன்றி சேய்க் குண்டோ போக்கிடம் (எளியேனை) காளமேகம். இராகம்:- நாதநாமக்கிரியை தாளம்:- ஆதி என்ன உதாரம் தேவி எனக்கருள் செய்தாய் இந்த நேரம் சின்ன மதியில் ஒளியைச் சேர்த்தாய் செந்தமிழ்க கவி ஆகச் செய்தாய் சேய்க்கும் தாய்க்கும் உள்ள சொந்தம் தெரிய உன் பாதார விந்தம் சேவை செய்யும் வண்ணம் செய்தாய் பாக்கியனானேன் உன் கிருபைக்கே பாத்தியனானேன் க்ருதார்த்தனானேன் (என்ன) இராகம்:- கல்யாணி முத்தேவி மார்க்கும் முதற்தேவி ஞாலத்து மூலத் தேவி அத்தேவி நான்கொண்ட ஆவலுக்கும் தமிழ் அன்பினுக்கும் ஒத்தே விரைந்து வந்தே என்றன் நாவில் உயிரெழுத்தை வைத்தே விரைந்து கவி பாடுகென்று மறைந்தனளே.